பனைமரம்
பனை மரத்தின் பயன்தனை பாங்காய் அறிவோமே - அதன் அனைத்தும் நல்ல மருந்தென அறிவால் உணர்வோமே! ஓலை நன்றாம் விசிறியாம் குடிசைத் தொழிலாகும் - அதன் நுங்கு பதனீர் பனங்கருப்பட்டி உடலை குளிர்விக்கும்! கீற்றை அழகாய் பரப்பியே குடிசை வேயலாம் - அதன் காற்றை நாளும் சுவாசித்தே சுகமாய் சாயலாம்! மண் அரிப்பைக் காப்பதிலே பனையோ பங்கு பெறும் - அதன் நன்மதிப்போ நூறாண்டு நிறைவாய் நுங்கு தரும்!