articles

img

பாஜகவை வழியனுப்ப போகும் வந்தே பாரத்! - வே.தூயவன்

பிரதமர் நரேந்திர மோடி செய்த சாதனைகளில் ஒன்றாக வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இயக் கப்பட்டதை பாரதிய ஜனதா கட்சியி னர் வெகுவாக பிரச்சாரம் செய்து வரு கின்றனர்.  ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில், வந்தே பாரத் ரயில் தான் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து வழி அனுப்பி வைக்கப் போகிறது என்று தெரிகிறது.  இந்தியாவை இணைப்பதில் ரயில்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த காலங்களில் ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. அந்த அளவுக்கு ரயில்வே துறைக்கு அரசு முக்கியத்துவம் அளித்தது.  ஆனால் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மற்ற எல்லா அரசு, பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலைத்ததை போல ரயில்வே துறையை யும் சீர்குலைக்கும் வேலையை செய்தது. குறிப்பாக தனி ரயில்வே பட்ஜெட் என்பதை நீக்கிவிட்டு பொது பட்ஜெட்டில் ரயில்வே வரவு செலவை இணைத்தது. இதனால் ரயில்வே துறைக்கு அளிக்கப்பட்ட தனி முக்கியத்துவம், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டன. 

தனித்தனியாகப் பிரித்து...

ரயில்வே துறையையும் தனியார் மயப்படுத்துவதற்காக மோடி அரசு பல்வேறு வித்தைகளை செய்து வருகிறது. குறிப்பாக ரயில் நிலையங்கள் பராமரிப்பு, ரயில் முன்பதிவு வசதி, ரயில் பெட்டி தொழிற்சாலை, இருப்புப் பாதை தயாரிப்பு  உள்ளிட்ட ஒவ்வொரு விஷயங்களையும் தனித்தனியாக பிரித்து அதை தனியாருக்கு முழுமையாக ஒப்படைப்பதற்கு வேலை செய்து வருகிறது.  இதனால் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய லட்சக்கணக்கான பணி யிடங்களை நிரப்பாமல் விட்டிருக்கிறது. பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறது. ரயில்வே துறையை மோடி அரசு புறக்கணித்ததன் விளைவாகவே ஒடிசா மாநிலத்தில் மிக மோசமான ரயில் விபத்து ஏற்பட்டு சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயில்கள் தடம் புரள்வது, விபத்தில் சிக்குவது அடிக்கடி கேள்விப்படும் விஷயமாகி விட்டது.  குறிப்பாக கொரோனா பொது முடக்க காலத்தை வாய்ப்பாக பயன்படுத்தி ரயில்வே பயணிகள் சேவையையும் சீர்குலைத்தது. நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலை ஏதோ ஒரு காரணம் சொல்லி நிறுத்திவிட்டது. விரைவு ரயில்களை, அதிவிரைவு ரயில்களாக அறிவித்து கட்டணத்தை உயர்த்தி விட்டது. இத்துடன் ஒவ்வொரு ரயிலிலும் படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை அதிகரிப்பதாக சொல்லி, கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி விட்டது.  இந்தியாவின் குறுக்கும் நெடுக்கு மாக பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம்  செல்லக்கூடிய ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை யும் குறைத்து விட்டது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள், குறிப்பாக புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் மிகுந்த நெருக்க டியான, ஆபத்தான பயணத்தை மேற்கொள் ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்ட ணத்தையும் ரத்து செய்து விட்டது.

சீர்குலைவுகளை  மூடி மறைக்க...

இத்தகைய எல்லாவிதமான சீர்குலைவு நடவடிக்கைகளையும் மூடி மறைப்ப தற்காக வந்தே பாரத் என்ற பெயரில் 140, 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாக சொல்லப்படும், அதிவிரைவு ரயில்களை பிரதமர் மோடியே நேரடியாக பல ரயில் நிலையங்களில் அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் பிரம்மாண்டமாக ஊதிப் பெருக்கி பிரச்சாரம் செய்யப்படும் வந்தே  பாரத் ரயில்கள் வழக்கமான வேகத்தில் செல்லக்கூடியவையாக இருக்கின்றன. இவற்றை அதிவிரைவு ரயில்கள் என்று காட்டிக் கொள்வதற்காக, மற்ற ரயில்களின் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை குறைத்து இயக்கும்படி செய்தனர்.  வந்தே பாரத் என்று மோடி அரசு பிரமாண்டமாக செய்த பிரச்சாரம் மிகப் பெரும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, வந்தே பாரத்தை காரணம் காட்டி நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான ரயில் சேவைகள் புறக்க ணிக்கப்பட்டன. 

கொட்டித் தீர்க்கப்படும்  கோபம், கொந்தளிப்பு

இதனால் சாதாரண ஏழை எளிய மக்களின் ரயில் பயணங்கள் துயரம் மிகுந்த தாக மாறி உள்ளது. இது பற்றி அவ் வப்போது தகவல்கள் வெளிவந்தாலும், மோடி மீடியாக்கள் இதைப் பற்றி பெரி தாக அலட்டிக் கொள்வதில்லை.  எனினும் நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்றுள்ள நிலையில், ரயில்வே சேவை குறைபாடுகளை நேரடியாக அனுபவித்த பயணிகள், மோடி அரசின் மீதான கோபத்தை சமூக ஊடகங்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர்.  முன்பெல்லாம் முன்பதிவு அல்லாத ரயில் பெட்டிகளில் கூட்ட நெருக்கடி காரண மாக சில பயணிகள் முன்பதிவு பெட்டி களில் ஏறி பயணிப்பது உண்டு. இப்போது இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் மட்டுமின்றி, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றிலும் முன்பதிவு செய்யாத பயணிகள் உள்ளே புகுந்து நெருக்கடியான நிலையில் பயணிக்கின்ற னர். முன்பதிவு கட்டணம் கொடுத்து பயணிப்பவர்களும் உரிய வசதியை பெற முடியாமல் தவிக்கின்றனர், மற்ற பய ணிகளும் எப்பாடுபட்டாவது ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கிடைக்கும் பெட்டியில் ஏறி நெருக்கடியில் பயணிக்கின் றனர் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

ரயில்வே சேவைக் குறைபாடு பாஜகவுக்கு செய்த சேதாரம்

மற்றொரு சுவாரசியமான உண்மை தகவலும் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பாஜகவின் ஆதரவா ளர். மும்பையில் வேலை செய்து கொண்டி ருந்தார். முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பீகாரில் தனது சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்காக ரயிலில் 29 மணி நேர பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது அவர் ரயில்வே துறையின் சேவை குறைபாட்டால் அனு பவித்த வேதனையை தாங்க மாட்டாமல், நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று பாஜகவுக்கு வாக்களிக்காமல், இந்தியா கூட்டணிக்கு வாக்களித்ததாக தனது நண்பரிடம் கூறியுள்ளார். இதுபோல் வெவ்வேறு ரயில்களில் வாக்களிப்பதற்காக சென்ற பயணிகள் தங்கள் கோபத்தை கொட்டி தீர்த்துள்ளனர். ரயில்வேயை தனியார்மயம் ஆக்கும், மோடி அரசின் தாராளமய கொள்கையின் விளைவை, லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் அனுபவத்தில் நேரடியாக உணர்ந்ததை அறிய முடிகிறது. அதை வாக்குப்பதிவிலும் அவர்கள் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து உறுதி செய்துள்ளனர்.  ஆக ரயில்வேயை சீர்குலைத்து வந்தே பாரத் ரயில் விடுவதால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்த மோடி அரசுக்கு,  அதே வந்தே பாரத் ரயில், ஆட்சியில் இருந்து வெளியேற்றி, வழியனுப்பக் கூடியதாகவும் இருக்கிறது!

;