districts

img

குவைத் சிறையில் வாடும் இராமநாதபுரம் மீனவர்கள்; நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசு

இராமநாதபுரம், மே 5 - பொய்வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, குவைத் சிறையில் வாடும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்க வலியுறுத்தி மோர்பண்ணை கிராமத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் - 500-க்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கியும் போராட்டம் நடத்தினர்.

கடல் வளம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் உலகின் பல நாடு களுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடு பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாசிப் பட்டணம், திருப்பாலைக்குடி, மோர் பண்ணை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4 மீனவர்கள் குவைத் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ளனர். 

இதில், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த  எம். கார்த்திக், ஜே. ஜேசு, மோர்பண்ணை கிரா மத்தைச் சேர்ந்த எம். சந்துரு, பாசிபட்ட ணத்தைச் சேர்ந்த எஸ். வினோத்குமார் ஆகி யோர் 5.12.2023 அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது குவைத் அரசால் கைது செய்யப்பட்டதுடன், போதைப் பொருள் கடத்தியதாக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளனர்.

விசாரணையில் இவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடவில்லை, மீன்பிடிக்கத் தான் சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும் குவைத் அரசாங்கம், மீனவர்களை வழக்கிலிருந்து விடுவித்து இந்தியாவிற்கு அனுப்பாமல், விசாரணை கைதிகளாக சிறையில் அடைத்துள்ளது. 

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகி யோர் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டும், ஒன்றிய வெளியறவு துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இத னிடையே, இவர்கள் மீதான வழக்கில் மே 7 அன்று தீர்ப்பு வரவுள்ள நிலையில், இந்தப் பிரச்சனையில் ஒன்றிய அரசு உட னடியாகத் தலையிட்டு, மீனவர்களை மீட்டுத் தர வலியுறுத்தி, மோர்பண்ணை கிராமத்தில் 1000 படகுகள் கடலுக்குச் செல்லாமல் ஞாயி றன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டதிற்கு சிஐடியு கடல்  தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எம். கருணாமூர்த்தி தலைமை வகித் தார். கிராமத் தலைவர் ஏ. ராஜதுரை, போராட்ட ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி, கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே. கணேசன், மாவட்ட நிர்வாகிகள் கே. அருள்ராஜ், கே. முருகவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கே. ஜெய காந்தன், ஊராட்சி மன்றத் தலைவர் துரை. பாலன் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

;