districts

தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப்பெற தொழிற்கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவை, ஏப். 6- தொழிற்துறை சார்ந்த புதிய கோரிக் கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு  செல்ல முடியாமல் உள்ளோம், மக்க ளின் நலன் கருதி தமிழ்நாட்டில் தேர்தல்  விதிமுறைகளை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என தொழிற்துறை கூட் டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு குறுந்தொழில் மற்றும் கைத்தொழில் முனைவோர் (டேக்ட்) சங் கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ், தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு அளித்துள்ள மனுவில்  தெரிவித்துள்ளதாவது, 18 ஆவது நாடா ளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்.19  ஆம்தேதி முடிவுற்றது.  தமிழகத்தில் உள்ள 39 நாடாளு மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வ துக்கான தேர்தல் முடிவுற்று, வாக்க ளிக்கப்பட்ட இயந்திரங்கள் அனைத் தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட் டில் உள்ளது. தேர்தல் முடிவுற்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில்  உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்க ளாக நடைபெறும் தேர்தல் நாள் வரை யில் 47 நாட்கள் நடத்தை விதிகள் தமிழ கத்தில் நடைமுறையில் இருக்கும் என் பது தமிழக மக்களின் அன்றாட பணிக ளுக்கு பெரும் அவதியை ஏற்படுத் தும்.  தேர்தல் முழுமையாக நடை பெற்று முடிந்த மாநிலங்களில் மாநில  அரசுகளின் செயல்பாடுகள் முடக்குவ தால் மாநில மக்களின் அனைத்து தேவைகளும் முடக்கப்படுகிறது. நாங் கள் தமிழ்நாட்டின் அரசிடம் இருந்து  புதியதாக கோரிக்கை முன்வைக்கவோ நடைமுறையில் ஏற்படும் பிரச்சனை களை மக்கள் பிரதிநிதிகள் மூலம் அர சின் கவனத்துக்கு கொண்டு போக முடி யாமல் உள்ளோம்.  நடத்தை விதிகள் உள்ளதால் அரசு  அதிகாரிகளை சந்தித்து முறையிட முடி யாமலும் கடுமையாக பாதித்து வருகி றோம். வாக்கு பதிவு முடிந்தும் 47 நாட் கள் மாநிலத்தின் செயல்பாடுகளை முடக்குவது அந்த மாநிலத்தின் மக்க ளின் உரிமைகளை பாதிப்பதாக நாங் கள் கருதுகிறோம். தேர்தல் அறிவிக்கப் பட்டதில் இருந்து மொத்தம் வாக்கு எண்ணப்படும் நாள் வரை 80 நாட்கள் மாநில மக்கள் மாநில அரசிடம் தங்கள்  தேவைகளை கேட்டு பெற முடியாத நிலையில் உள்ளோம்.  எனவே, தங்கள் மத்திய தேர்தல்  ஆணையத்தில் முறையிட்டு உடனடி யாக தமிழகத்தில் ஓட்டு எண்ணப்படும் மையங்களுக்கான தனியாக தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்திட வேண்டும்.  மாநிலத்தில் உள்ள அரசு  இயந்திரம் முழுமையாக செயல்படு வதற்கு அனைத்து துறைகளிலும் தேர் தல் நடைமுறை திரும்ப பெற இந்திய  தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற  வேண்டும் என அதில் வலியுறுத்தி உள் ளார்.

;