districts

img

கோவையில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில மாநாடு

கோவை, மே 5– தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு ஜூன் மாதம் கோவையில் நடை பெறுவதையொட்டி, மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான 80 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாநில மாநாடு ஜூன் 19 துவங்கி 21 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை வெற்றி கரமாக்கிடும் வகையில் வர வேற்புக்குழு அமைப்பு கூட்டம் செவ்வாயன்று காந்திபுரம் 100 அடி சாலை மலையாள சமாஜ அரங்கில் நடைபெற்றது. சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க சம்மேளன பொதுச்செய லாளர் ஆறுமுக நயினார், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

வரவேற்புக்குழு அமைப்பு
இம்மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக பி.ஆர்.நடராஜன் எம்.பி, செயலாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக கோபால் உள்ளிட்ட 80 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக் கப்பட்டது. இதையடுத்து, சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் பேசுகையில், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் லட்சக் கணக்கான மக்களுடன் அன்றாடம் பயணிக்கும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் நிலை, பொதுப் போக்குவரத்து மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் இம்மாநட்டில் விவாதிக் கப்பட உள்ளது. இம்மாநாடு கோவையில் வெகு சிறப்பாக நடத்திடவும், வென்றெடுக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து திட்டமிடல் செய்கிற மாநாடாக இது இருக்கும். இத்தகைய முக்கி யத்துவம் வாய்ந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திடுவோம் என்றார். இந்நிகழ்வில், அரசு போக்கு வரத்து சம்மேளன பொருளாளர் சசிக்குமார், துணை பொதுச்செய லாளர்கள் தயானந்தம், ஜான்கென்னடி மற்றும் சம்மேளன நிர்வாகிகள் எஸ்இடிசி கனகராஜ், சாலை போக்குவரத்து மாநில பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வேளாங்கன்னி ராஜ், செயலாளர் பரமசிவம், திருப்பூர் செல்லதுரை, ஈரோடு முருகையா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;