districts

img

குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், மே 6- குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி  புரியும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு, தமிழ கம் முழுவதும் நிலுவை தொகை வழங்கி பல மாதங்கள் ஆகிய நிலை யில், திருப்பூர் கோட்டத்தில் மட் டும் இரண்டு ஆண் டுகளாக நிலு வைத்தொகை வழங்கப்படாமல் உள்ளதை கண் டித்து தொழிலா ளர்கள் காத்தி ருப்பு போராட்டத் தில் ஈடுபட்ட னர். பங்களா ஸ்டாப் அவிநாசி சாலை யில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய  அலுவலகத்தில் திங்களன்று நடை பெற்ற இக்காத்திருப்பு போராட்டத் திற்கு சிஐடியு டிவார்டு போர்டு வொர் கர்ஸ் யூனியன் கோட்டத் தலைவர் எ. பிரான்சிஸ் தலைமை வகித்தார். இப்போராட்டம் குறித்து டிவார்டு போர்டு வொர்கர்ஸ் யூனியன் (சிஐடியு)  கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டச்  செயலாளர் ஆர்.சரவணன் கூறுகை யில், 30 ஆண்டுகள் பணிமுடித்த பணி யாளர்களுக்கு போனஸ், இன்கி ரிமெண்ட் நிலுவை சம்பளம் உள்ளிட் டவை கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. தொகுப்பூ திய அடிப்படையில் பணியில் சேர்ந்த  பணியாளர்களுக்கு 480 நாட்கள் முதல்  ஊதிய நிர்ணயம் மற்றும் நிலுவைத் தொகை தமிழகம் முழுவதும் வழங்கப் பட்டு பல மாதங்கள் ஆகிறது. திருப்பூர்  கோட்டத்தில் மட்டும் இரண்டு ஆண்டுக ளாக வழங்கப்படவில்லை. தேசிய பண் டிகை விடுமுறைகளில் பணிபுரிந்த மைக்காக வழங்க வேண்டிய இரட்டிப்பு  ஊதியமும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளது. இதை உடனடியாக வழங்க நடவ டிக்கை எடுக்க கோரி தான் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

;