districts

சென்னை முக்கிய செய்திகள்

 திருவள்ளூர் மாவட்டம் 91.32 விழுக்காடு தேர்ச்சி

திருவள்ளூர், மே 6- திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மொத்த முள்ள 244 பள்ளிகளை உள்ளடக்கிய 105 தேர்வு மையங்களில் எழுதிய மாணவர்கள் 11863 மற்றும்  மாணவிகள் 13762 ஆக  மொத்தம் 25625 மாணாக்கர் கள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 10410 பேர், மாணவிகள் 12991  பேர் என மொத்தம் 23401 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மாண வர்கள் 87.75 விழுக்காடு தேர்ச்சியும், மாணவிகள் 94.40 விழுக்காடு தேர்ச்சி யும் ஆக மொத்தம் 91.32  விழுக்காடு தேர்ச்சி பெற்றுள் ளனர். 102 அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்கள் 5230, மாணவிகள் 6767 ஆக  மொத்தம் 11997 தேர்வு எழுதினார்கள்.  அதில் மாணவர்கள் 4041 பேர், மாணவிகள் 6121 பேர் ஆக மொத்தம் 10162 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 77.27 விழுக்காடு மாணவர்கள் 90.45 விழுக்காடு ஆக மொத்தம் 84.70 விழுக்காடு ஆகும்.

திருடன் தப்பியோட்டம்

சென்னை, மே 6- புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது ஆட்டோவில் இருந்து குதித்து பைக் திருடன் தப்பி ஓடிவிட்டார். சென்னை ஓட்டேரி பட்டாளம் சூரத் பவன் தெரு பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (21). இவர்  தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 29ம் தேதி  இரவு  தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு மறுநாள்  காலை வந்து பார்த்தபோது பைக் திருடு போயிருந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்  காவல்துறையினர் விசாரணை செய்து புளியந்தோப்பு பி.எஸ். மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (25) என்பவரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர் பைக் திருடியது அம்பலமானது.

புழல் சிறை பெண் கைதி மரணம்

சென்னை, மே 6- சென்னை புழல் சிறை பெண் கைதி இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவரம் வி.எஸ். மணி நகரைச் சேர்ந்தவர் வேதா மேரி (68). இவர் ஒரு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று,  அந்த தண்டனையை புழல் தனிச்சிறையில் கடந்த ஆண்டு  ஏப்ரல் முதல் அனுபவித்து வந்தார். சிறையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வேதா  மேரி கடந்த 1ஆம் தேதி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது,  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வேதா மேரி திங்கட்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை  நடத்தி வருகின்றனர்.

12ஆம் வகுப்பு தேர்வு:  புழல் சிறையில் 8 பேர் தேர்ச்சி

சென்னை, மே 6- புழல் சிறையில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய  9 பேரில் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகள் மேற்கொண்டு படிக்க பல்வேறு வசதிகளை சிறைத்துறை நிர்வாகம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் 10ஆம் வகுப்பு,  12ஆம் வகுப்பு, கல்லூரி படிப்பு போன்றவற்றிற்கு சிறைக் கைதிகள் பலர் தேர்வு எழுதி, தேர்வாகி வாழ்க்கைத் தரம் மேம்பட சிறை நிர்வாகம் உதவி வருகிறது. இந்த ஆண்டு ஆண்கள் சிறையில் 6 பேர், பெண்கள் சிறையில் 3 பேர் என மொத்தம் 9 பேர் தேர்வு எழுதினர்.இதில் ஆண்கள்  6 பேர், பெண்கள் 2 பேர் என மொத்தம் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர்.  

30 கிலோ கஞ்சா கடத்தல்

அம்பத்தூர், மே 6-  பூந்தமல்லி வழியாக வெளி மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தி சென்ற 3 இளைஞர்கள் சனிக்கிழமையன்று  (மே 4) காவல்துறையினர் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 30 கிலோ எடையுள்ள கஞ்சாவை  போலீசார் பறிமுதல் செய்தனர். பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை, வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமாக 3 இளைஞர்கள் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார்  வழிமறித்து விசாரணை நடத்திய போது, 30 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல்  செய்யப்பட்டது.

சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் 4 பேர் கைது

சென்னை, மே. 6- சென்னையில் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 10 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகரில் செயின் பறிப்பு, வாகனங் கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து  வருகின்றனர். ஆதம்பாக் கம், கணேஷ் நகர் 1வது  தெருவில் நடந்து சென்று  கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத் தில் வந்த நபர் ஒருவர்  பத்மாவதி என்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து பத்மாவதி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தங்கச்சங் கிலி பறிப்பு குற்றத்தில் ஈடுபட்ட அமோல் (32) கைது  செய்யப்பட்டு 7 சவரன் தங்க  நகைகள் மற்றும் குற்ற  சம்பவத்திற்கு பயன்படுத் திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் இந்திரா நகர்  ரயில் நிலையம் மற்றும் பச்சையப்பன் கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த அவர்களிடம் நகைகளை பறித்து சென்ற சூர்யா ( 26), சத்யா (24)  மற்றும் ராஜ்குமார் (28) ஆகி யோரை கைது செய்து 3  சவரன் நகைகள், செல் போன் மற்றும் 2 இருசக்கர  வாகனங்களை பறிமுதல்  செய்தனர். கைது செய்யப் பட்ட குற்றவாளிகள் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப் பட்டனர்.

சிறுமியின் மருத்துவ செலவை  சென்னை மாநகராட்சி ஏற்கும்: ராதாகிருஷ்ணன்

சென்னை, மே.6- சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் தொடர்பாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சென்னை மாந கராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு  மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், “சென்னையில் நாய்கள்  கடித்து காயமடைந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்” என்றார். உரிமையாளர் மீது வழக்கு எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார். நாய்களின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.  நாய்களின் உரிமையாளர் புகழேந்தி,  மனைவி வரலட்சுமி, மகன் வெங்கேடசன்  ஆகிய 3 பேர் மீதும் ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய் துள்ளனர். வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை, பறவைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் வளர்த்து வரும் நிலையில் வெறும் 1,200 பேர் மட்டுமே மாநகராட்சியில் பதிவு செய்துள்ளனர்.செல்லப்பிராணிகளை பதிவு செய்ய வேண்டும் என வீடுதோறும் சென்று மாநக ராட்சி சார்பில் அறிவுறுத்தப்படும் என்று கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில்  94.71 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

செங்கல்பட்டு, மே 6- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொத்த மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 237. இவற்றில் அரசு, நகராட்சி  மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் எண்ணிக்கை 79. அரசு உதவி  பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 20.  மெட்ரிகுலேசன் மற்றும் சுயநிதி பள்ளிகளின்  எண்ணிக்கை 138. தேர்ச்சி விவரம் மார்ச் 2024 ல் நடைபெற்ற பொதுத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 25242 அதில் தேர்ச்சி பெற்ற மாணவ மாண வியர்களின் எண்ணிக்கை 23907 பேர் மற்றும் தேர்ச்சி விழுக்காடு 94.71 %  மாநில  அளவில் 18 ஆவது இடம். கடந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு 92.52% மாநில அளவில் 22ஆவது இடம். இந்த பொதுத் தேர்வில் மாணவர்கள் 11455  மாணவிகள் 13787 தேர்வு எழுதினர். இதில் 10632 மாணவர்கள், 13275 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விழுக்காடு 92.82 விழுக்காடு, மாணவிகள் 96.29 விழுக்காடு ஆகும்.பள்ளிகள் வாரியாக (அரசுப் பள்ளிகள்)அரசு,  நகராட்சி மற்றும் நலத்துறைப் பள்ளிகளைச் சார்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை  5868. இதில் 5459 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி விழுக்காடு 89.94 விழுக்காடு ஆகும். தேர்வு எழுதிய மாணவர்கள் 4018 தேர்ச்சி  பெற்றவர்கள் 3432 தேர்வு விழுக்காடு 85.42 விழுக்காடு, தேர்வு எழுதிய மாணவிகள் 5868  தேர்ச்சி பெற்றவர்கள் 5459 தேர்வு விழுக்காடு  93.03 விழுக்காடு. அரசுப் பள்ளிகளில் 100 விழுக்காடு  தேர்ச்சி பெற்ற பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளி, அஞ்சூர், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி, தையூர், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி, இரும்பேடு ஆகும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!

ராணிப்பேட்டை,மே 6- ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த மாண வர்களின் எண்ணிக்கை 12,401. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 11,444 மாணவர்கள். மொத்த தேர்ச்சி விகிதம் 92.28 விழுக்காடு.  மேலும் 6,659 மாணவிகள் 6,330 மாணவி கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேர்ச்சி விகிதம் 95.06 விழுக்காடாகும்.  5,742 மாண வர்கள் 5,114 மாணவர்கள் தேர்ச்சி பெற்றி ருக்கின்றனர். தேர்ச்சி 89.06 விழுக்காடாகும்.  அரசு-நலத்துறை பள்ளிகள் அரசுப் பள்ளிகளில் மட்டும் 7,093 மாண வர்கள் தேர்வு எழுதினர். இதில் 6,406 மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.31 விழுக்காடாகும். ஆதி திராவிடர் நலப்பள்ளியில் 195 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 173 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2,243 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 2,038 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் 2,870 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 2,827 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1,702 மாணவர்கள் தேர்வு எழுதிய தில் 1,507 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர். பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 3,675 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3,493 மாணவிகள் தேர்ச்சி பெற்றி ருக்கிறார்கள். மேலும் இருபாலர் பயிலும் மேல்நிலைப்பள்ளிகளில் 7,024 மாண வர்கள் தேர்வு எழுதியதில் 6,444 மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். 100 விழுக்காடு தேர்ச்சி மேலப்புலம், குருவராஜ் பேட்டை, நாக வேடு மற்றும் ராணிப்பேட்டை மாதிரி ஆகிய 4 அரசுப் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவர்களும் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு நிதி உதவி பெறும் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 27 தனியார் பள்ளிகளும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தமாக மாவட்டத்தில் 32 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரி வித்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.  ஊழியர்களுக்கு ஊதியம் கோரிக்கை

சிதம்பரம், மே. 6- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழி யர்கள் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் தமிழக அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்கல்வி நிலை யங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பணி நிறவல் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் மே 6 ம் தேதி கடந்தும் வழங்கவில்லை என்றும் உடனடி யாக ஊதியம் வழங்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்து  ஊழி யர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக கிளையின் இணை பொது செயலாளர் காந்தி, பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார் அதில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாத ஊதியத்தை விரைவாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் 92.91 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

 கள்ளக்குறிச்சி,மே 6- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்தார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 122 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 17,198 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 15,978 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 4.20 விழுக்காடு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 91.06 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 1.85 அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் 5 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியும், தனியார் பள்ளிகளில் 18 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்  6 பள்ளிகள் முழு தேர்ச்சி

திருவண்ணாமலை,மே 6- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மொத்த மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 258. இதில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 26551. இவற்றில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 24021. தேர்ச்சி விழுக்காடு 90.47. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.67 விழுக்காடு அதிகம் என்றாலும் மாநில அளவில் 38 ஆவது இடம் பிடித்து கடைசியாக வந்துள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் 12724 பேரும், மாண வர்கள் 138277 பேர் தேர்வு எழுதினர். இதில் 11037 மாண வர்கள், 12984 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரண மல்லூர் பெண்கள் அரசுப் பள்ளி, மடம் அரசு பள்ளி, செவரப்பூண்டி அரசுப்பள்ளி, ஜவ்வாதுமலை ஜிடிஆர் நிம்மியம்பட்டு பள்ளி, ஜிடிஆர் பட்டரைக்காடு பள்ளி, ஜவ்வாது மலை பள்ளி ஆகிய பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.

கடலூரில் தேர்வு எழுதிய  8 சிறைவாசிகளும் தேர்ச்சி

கடலூர், மே 7- கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிக மான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு இருக்கும் 7 ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் ஒரு தடுப்பு காவல் கைதி உட்பட  8 சிறைவாசிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


 

;