districts

திருச்சி முக்கிய செய்திகள்

பாவை பைந்தமிழ்ப் பேரவை விழா

பாபநாசம், ஏப்.29 - பாவை பைந்தமிழ்ப் பேரவை 2 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா  தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தில் நடைபெற்றது. முன்னதாக பேரவை துணைத் தலைவர் சங்கர்  வரவேற்றார். ஆலோசகர்  மோகன் தலைமை வகித் தார். தலைவர் துரையர சன் முன்னிலை வகித்தார்.  பட்டிமன்றப் பேச்சாளர் கோபாலகிருஷ்ணன் ‘கற்றது அறிவு’ என்றத் தலைப்பில் பேசினார்.  ஒரத்தநாடு கீழ வன்னிப் பட்டு ஊராட்சித் தலைவ ருக்கு, ‘மக்கள் நல மாண் பாளர்’ என்ற விருதை பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறு முகம் வழங்கினார். அம்மாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கண் ணனுக்கு, ‘மாணவர் நல  மாண்பாளர்’ என்ற விருதை உலகத் திருக் குறள் மையச் செயலர் செயராமன் வழங்கினார்.  பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு புத்தகப் பரிசு,  சான்றிதழ் வழங்கப்பட் டது. இதில் பேரவைச் செயலர் கமல ஹாசன், பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். துணைச் செயலர் அசோக் நன்றி கூறினார்.

இருசக்கர வாகனம் திருட்டு: இருவர் கைது 

திருச்சிராப்பள்ளி, ஏப்.29 - திருச்சி உறையூர், பாண்டமங்கலம் அகி லாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சிவலிங்கா (45). சம்பவத்தன்று இவர்  தனது வீட்டுக்கு வெளியே  இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்று விட்டார். இந்நிலையில் மறுநாள் காலை அவர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாக னம் காணவில்லை. இது குறித்து சிவலிங்கா உறை யூர் போலீசில் புகார் கொடுத்தார்.  புகாரின் பேரில் போலீ சார் வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் சந்தேகத் துக்கிடமாக சுற்றித்திரிந்த  இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத் தினர். விசாரணையில், திருச்சி பொன்மலை கணேசபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும்  பொன்மலை காந்தி நக ரைச் சேர்ந்த குமரவேல் (21) ஆகியோரை போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு போன இருசக்கர  வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

பாபநாசம், ஏப்.29 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி ஷங்கர் விடுத்துள்ள அறிக் கையில், பாபநாசம் பேரூ ராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரியை  ஒவ்வொரு அரையாண்டி லும்,  ஆரம்ப தேதியி லிருந்து 30 நாட்களுக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத் தொகை, அதிக பட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். தற்போது முதல் அரையாண்டு சொத்து வரி செலுத்த ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.  பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி  ரசீது பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பாபநாசம் பேரூராட்சி பகுதி பொதுமக்கள் இந்த  அரிய வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண் டுமென” கூறப்பட்டு உள்ளது.

கொளக்குடி ஊராட்சியில்  மண் மாதிரிகள் சேகரித்தல் முகாம்

தஞ்சாவூர், ஏப்.29-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம், வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தலைமையில், மண் மாதிரிகள் சேக ரித்தல் முகாம் கொளக்குடி கிராமத்தில் நடைபெற்றது.  முன்னதாக மண் மாதிரி எடுக்கும் வழிமுறைகளை வேளாண் உதவி இயக்குநர் சாந்தி எடுத்துரைத்தார்.  அப்போது அவர் பேசுகையில், “மண் மாதிரி எடுக்கும் முறைகள், மண்ணின் தன்மை, மண்ணிற்கு தேவையான ஊட்டச்சத்துகள், ரசாயன உரங்கள் நிலத்தின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முறைகள் போன்றவைகளை மண்  மாதிரி முடிவின் மூலம் அறிந்து, பயிர் சாகுபடி செய்யும்  போது அதிகளவில் ரசாயன உரங்கள் இடுவது குறைக்கப்படு கிறது. இதனால் மண்ணின் தன்மையும் பாதுகாக்கப்பட்டு, பயிருக்கு தேவையான சத்துகள் கிடைப்பதனால் விவசாயி களுக்கு பொருள் சேதம் குறைந்து, மகசூல் அதிகரித்து லாபம்  அடைகிறார்கள்.  இந்த ஆண்டுக்கான (2024-2025) கலைஞரின் அனைத்து  கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிரா மங்களான சோலைக்காடு, விளங்குளம், ருத்திரசிந்தாமணி, கொளக்குடி, மணக்காடு, புக்கரம்பை, கட்டையங்காடு, உக்கடை ஆகிய கிராமங்களில், மண் மாதிரிகள் வேளாண்மைத் துறையின் மூலமாக எடுக்கப்பட உள்ளது. எனவே கிராம  விவசாயிகள் அனைவரும் தங்களது பகுதி உதவி வேளாண்  அலுவலர்களை தொடர்பு கொண்டு மண் மாதிரி எடுத்து பயன் பெறலாம்” என்றார்.  மண் மாதிரி செயல் விளக்கத்தினை வேளாண் துணை  அலுவலர் து.சிவசுப்ரமணியன், வேளாண் உதவி அலுவலர்  அ.நிவாசன் ஆகியோர் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். 

வேலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதச் சடங்குடன் கூடிய நிகழ்ச்சி ரத்து சிபிஎம் தலையீடு எதிரொலி

திருவாரூர், ஏப்.29 - நன்னிலம் ஒன்றியம் வேலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதச் சடங்குடன் நடை பெற இருந்த நிகழ்ச்சி சிபிஎம் தலை யிட்டால் ரத்து செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யம், 9 வேலங்குடி பகுதியில் ஆரம்ப சுகாதார  நிலையம் சுமார் 5 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலை யத்தை திங்களன்று மத்திய ஆய்வுக்குழு பார்வையிட வருவதாகக் தெரிகிறது. மத்திய ஆய்வுக் குழுவை வரவேற்பதற்காக, நிலை யத்தில், பூரணகும்ப மரியாதையுடன் இந்து  முறைப்படி வரவேற்க நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இச்சம்பவத்தை அறிந்த சிபிஎம் ஒன்றியக்  குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் வரத.வசந்தராஜன், கிளைச் செயலாளர் வசந்தபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மதரீதியாக நிகழ்ச்சி நடத்த துறை சார்ந்த உத்தரவு ஏதே னும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, சிகிச் சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம்  பார்க்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட மதம்  சார்ந்த சடங்குகளை செய்வது ஏற்கத்தக்கது  அல்ல. எனவே உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த னர். ஊழியர்கள் ஆர்வக் கோளாறில் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர். இனிமேல் இது போன்று நடைபெறாது என நிலைய மருத்து வர் உறுதியளித்தார். இதனால் சடங்கு களுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் உடனடி யாக அங்கிருந்து சென்றனர். பின்பு, மத்திய ஆய்வு குழு உறுப்பினர் சுகாதார நிலை யத்தை ஆய்வு செய்து சென்றனர். காவி வண்ணம் இதுகுறித்து தமுஎகச நன்னிலம் ஒன்றியச்  செயலாளர் வசந்தராஜன் கூறுகையில், “வேலங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு காவி வண்ணம் பூசப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்  சித்தாந்தத்தில் உள்ள நபர்கள், அலுவலக  ரீதியில் ஊடுருவுவதை இது உணர்த்துகிறது.  ஆகவே தமிழ்நாடு அரசு, அரசு அலுவல கங்களில் துவக்க நிகழ்ச்சி உட்பட மற்ற  நிகழ்ச்சிகளை, மதச் சடங்குடன் நடத்த ஏற் பாடும் செய்யும் நபர்களை கண்டறிந்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கொள்ளிடம் ஆற்றங்கரையில் முதியவர் சடலம் மீட்பு

அரியலூர், ஏப்.29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அருகே  உள்ள மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் நீலத்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் பகுதியில் சிலர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிலர் அப்பாலத்தின்கீழ் 60 வயது மதிக்கத்தக்க முதியவர்  படுத்திருந்ததையும் அவர் அருகில் பூச்சி மருந்து பாட்டில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ள னர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் காவல் உதவி ஆய்வா ளர் முருகேசன் தலைமையிலான போலீசார் அருகே சென்று பார்த்த போது,  முதியவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.  இதனையடுத்து அவர் அருகில் வைத்திருந்த பையை ஆய்வு செய்த தில், அந்த முதியவரின் ஆதார் அடையாள அட்டையின் நகல்கள் இருந்தன.  அந்த அடையாள அட்டையில் இருந்து, தற்கொலை செய்து இறந்து போன  முதியவர், தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் போலீஸ் சரகம், மருத நல்லூர் கருப்பூர் அருவேலி கீழத்தெருவைச் சேர்ந்த பக்கிரி மகன் சுந்தரமூர்த்தி (60) என்பது தெரிந்தது. பின்னர், அவரது குடும்பத்தாருக்கு, இறப்பு குறித்து  தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் முதியவர்  சுந்தரமூர்த்தியின் உடலை ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பொய் வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டல்: இளைஞர் தற்கொலை முயற்சி

மயிலாடுதுறை, ஏப்.29-  மயிலாடுதுறை மாவட்டம் திருமஞ்சன வீதியைச் சேர்ந்தவர் 23 வயதான தீபக்.  சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது மாப்படுகை ரயில்வே கேட் அருகே உள்ள தனது தந்தை யின் மீன் கடையில், தந்தைக்கு உதவியாக மீன் வெட்டி கொடுத்து வருகிறார்.  இந்நிலையில் ஞாயிறன்று காலை இவர்  வழக்கம்போல தனது தந்தையின் கடையில் மீன் வெட்டி கொடுத்து வியாபாரம் செய்து உள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்து  போலீசார் ராமமூர்த்தி கடையில் கஞ்சா  வைத்திருப்பதாக கூறி ஆய்வு செய்துள்ள னர். இதனால் மனமுடைந்த தீபக் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன் றுள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள்  அவரை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  இதுகுறித்து தீபக் கூறுகையில், “தனக்கு  கஞ்சா பழக்கம் இருப்பதாகவும், ஆனால் தான் கஞ்சா விற்பனை செய்வது கிடையாது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மயி லாடுதுறை காவல்துறையினர் தன்மீது பொய்  குற்றச்சாட்டு சுமத்தி அவர்களாக கஞ்சாவை எடுத்துவந்து நான் வைத்திருந்ததாக கூறி வழக்கு போடுவதும், என்னிடம் பணம் கேட்டு  மிரட்டுவதும் தொடர் கதையாக உள்ளது.  இதனால் தனது தந்தையின் கடையில் வியாபாரம் பாதித்து வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது.  காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதால், தான் தற்கொ லைக்கு முயன்றதாக” தெரிவித்தார்.  மயிலாடுதுறையில் காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு: ஒருவர் கைது

திருச்சிராப்பள்ளி, ஏப்.29 - தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி யைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). சென்னை யில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், சென்னை-நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு  திரும்பினார். அப்போது, அவரது இருக்கை ஜன்னல்  ஓரத்தில் இருந்தது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷ னில் நின்றபோது, பிளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், தண்ணீர் பாட்டில் ஒன்றை அவரது பக்கத்தில் இருக்கும் பயணிக்கு கொடுக்குமாறு தெரிவித்தார்.  உடனே வெங்கடேஷ் ஜன்னல் வழியாக கையை நீட்டி தண்ணீர் பாட்டிலை வாங்கிய போது, அந்த மர்ம நபர் வெங்கடேஷ் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த  சம்பவம் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. ஆனால் அடுத்த நொடி அந்த ரயில்  அங்கிருந்து புறப்பட்டதால் ஒன்றும் செய்ய  இயலவில்லை. இந்த சம்பவத்தில் பாதியளவு செயின் கொள் ளையனின் கையில் சிக்கிவிட்டது. பின்னர் அடுத்த ரயில் நிலையத்தில் வெங்கடேஷ் இறங்கி, திருச்சி ரயில்வே காவல் ஆய்வா ளர் மோகனசுந்தரி, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் செல்வராஜா ஆகி யோரிடம் புகார் அளித்தார். பின்னர் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.  அப்போது, அதே ரயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் இந்த செயின் பறிப்பில்  ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்,  அந்த மர்ம வாலிபரை போலீசார் தேடி வந்த னர். அடுத்த நாள் அதே வாலிபர் கையில் தண்ணீர் பாட்டிலுடன் அந்த ரயிலில் இருந்து  இறங்கி வேறு பயணிகளிடம் நகை பறிப்ப தற்காக அதே பாணியில் நின்று கொண்டிருந் தார். உடனே ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஐடி  ஊழியரின் நகையை பறித்தவர் இந்த வாலி பர்தான் என்பது தெரியவந்தது. பின்னர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை  திருச்சி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்த னர். ரயில்வே போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.  தொடர் விசாரணையில், கைதானவர் கடலூர் மாவட்டம் அகரம் பங்காளிகுப்பம் வடக்கு காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (26) என தெரிய வந்தது. பின்னர் அவரிட மிருந்து 13 கிராம் தங்க நகையை பறிமுதல்  செய்தனர். கைது செய்யப்பட்ட கோவிந்த ராஜ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

;