districts

img

தோழர் காளியப்பன் 34 ஆவது நினைவு தினம்: விளமல் கல்பாலத்தில் வீரவணக்க நிகழ்ச்சி

திருவாரூர், மே 5 - உழைப்பாளி வர்க்க கூலி போராட் டத்தின் களப்போராளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர்  பி.காளியப்பன் 34 ஆம் ஆண்டு நினைவு  தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப் பட்டது. இதையொட்டி விளமல்-கல்பாலம் அருகே காளியப்பன் நினைவிடத்தில், செங்கொடியேற்றி வீரவணக்க நிகழ்ச்சி  நடைபெற்றது. தோழர் பி.காளியப்பன் பல்வேறு  வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்து,  அதில் வெற்றி கண்டவர். 1967 இல் ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தில், நாகப்பட்டி னம் வட்டக் குழுவாக இருந்த போது நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும்  திருவாரூர் பகுதியில் மிகப்பெரிய கூலி  மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தோழர் பி.காளியப்பன் தலைமை யில், விளமல்-கல்பாலம் அருகே நடந்த  மறியலில் நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் பங்கேற்றனர். அப்போது தமிழ்நாடு முதல்வராக சி.என்.அண்ணாதுரை, ஒரு நிகழ்ச்சி யில் பங்கேற்க திருவாரூர் வந்தார். முத லமைச்சரின் கார் மறியல் நடைபெறும் இடத்தை கடந்து செல்லும்போது, துணிச்சலாக முதல்வரின் காரை நிறுத்தி கூலி போராட்டத்திற்கான மனு வை முதல்வரிடம் கொடுத்தார். அதன் பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த கூலி போராட்டம் வெற்றி பெற்றது.  மேலும் கட்சி அறிவித்த பல்வேறு போரா ட்டங்களுக்கு தலைமை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர் களப்போராளி காளி யப்பன். அவரது நினைவு தின கொடி யேற்றத்திற்கு, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் தலைமை வகித்தார். நகரக் குழு உறுப்பினர் என்.ராஜசேகர் முன்னிலை வகித்தார். தோழர் பி.காளியப்பன் நினைவு தின செங்கொடியை சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ஜி.ரகுராமன், ஒன்றியச் செயலா ளர் என்.இடும்பையன், சிஐடியு மாவட்டத்  தலைவர் எம்.கே.என்.அனிபா, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் எம்.சௌந்தர ராஜன், செயலாளர் ஜீ.வெங்கடேசன், வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் எம்.டி.கேசவராஜ் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் மறைந்த தோழர் பி. காளியப்பனின் புதல்வர்கள் பி.கே.செல்வம், பி.கே. சின்னையன் மற்றும்  அவரிடம் களப்பணியாற்றிய மூத்த  தோழர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;