districts

திருச்சி முக்கிய செய்திகள்

கடன் தருவதாகக் கூறி பெண்ணிடம் மோசடி

தஞ்சாவூர், ஏப்.28- பெண்ணிடம் கைப்பேசியில் பேசி கடன் தருவதாகக் கூறி, ஓடிபி விவரங்களைப் பெற்று ரூ.10 ஆயிரத்தைத் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வரு கின்றனர். தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த 33 வயது  பெண்ணுக்கு மர்ம நபர் கைப்பேசியில் பேசி குறைந்த  வட்டியில் ரூ. 4 லட்சத்துக்கு தனி நபர் கடன் வழங்கப்படும்  எனக் கூறினார். இதை நம்பிய அப்பெண், மர்ம நபர் கேட்ட வங்கிக் கணக்கு மற்றும் ஓ.டி.பி. விவரத்தைக் கொடுத்தார். இதன்மூலம் பெண்ணின் வங்கிக் கணக்கி லிருந்து மர்ம நபர் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை இணைய வழியில் திருடிவிட்டார். இதன்பின், அப்பெண் தொடர்பு கொண்டும் மர்ம  நபர் இணைப்பை எடுக்கவில்லை. தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த அப்பெண், தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரி வில் புகார் செய்ததன் பேரில் காவல் துறையினர் வழக்குப்  பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பு: சட்ட விழிப்புணர்வு முகாம்

அரியலூர், ஏப்.28- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த  கழுவந்தோண்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்களுக் கான பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. முகாமுக்கு வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவ ரும், சார்பு நீதிபதியுமான இரா.லதா தலைமை வகித்து,  பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். குற்றவியல் நடுவர் ராஜசேகரன், நீதிமன்ற  செரஸ்தார் இளங்கோ, ஜெயங்கொண்டம் வழக்குரை ஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக  ஊராட்சித் தலைவர் மகாலிங்கம் வரவேற்றார். ஊராட்சி  செயலர் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் மாணவர் சேர்க்கை

திருவில்லிபுத்தூர், ஏப்.28- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்  கிருஷ்ணன் கோவிலில் உள்ள கலசலிங்கம் பார்மசி கல்லூரி 37 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு  ஆண்டும் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்க ளும், பல்நோக்கு மருத்துவமனைகளும் மருந்து விற்பனை நிறுவனங்களும் வளாக நேர்முகத் தேர்வு கள் மூலம் தேர்ந்தெடுக்கின்றன.  கல்லூரியில் டி ஃபார்ம் (2 ஆண்டு பார்மசி பட்டயப் படிப்பு), பி ஃபார்ம்(4 ஆண்டுகள்), டாக்டர் ஆஃப் பார்மசி  (பார்ம் டி - 6 ஆண்டுகள்), எம். ஃபார்ம்(2 வருட முதுநிலை படிப்பு - 4 பிரிவுகள்), பிஹெச்.டி ஆராய்ச்சி படிப்பு கள் உள்ளன. 2024 - 25 ஆம் ஆண்டு நிர்வாக  ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள்  கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் சேர விரும்புவோர் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப் பங்களை பெற்று பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் நா. வெங்க டேஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமுதாய நிலத்தை குத்தகை விடுவதில் பிரச்சனை: அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு

பாபநாசம், ஏப்.28 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே  திருவைக்காவூர் கிராமத்தில் சமுதாய நிலத்தை குத்தகை  விடுவது தொடர்பாக இரு  தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இது  தொடர்பாக பாபநாசம் தாலுகா அலுவல கத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடை பெற்றது.  தாசில்தார் மணிகண்டன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், குதியாளம்மன் கோவிலுக்குச் சொந்தமான சமுதாய நிலத் தினை பொது குத்தகை ஏலம் விட இரண்டு தரப்பினரும் சம்மதம் தெரிவித்ததைத் தொ டர்ந்து சுமூகத் தீர்வு ஏற்பட்டது.  மேலும் 3 நபர்கள் கொண்ட நிர்வாகக்  குழுவிற்கு புதிதாக ராஜேந்திரன், வெங்க டாசலம், முருகராஜ் ஆகியோரை நியமனம் செய்திடவும், கோயிலுக்கு சொந்தமான சமுதாய நிலத்தை ஏலம் விடும்போது, கிடைக் கும் ஏலத்தொகையினை ஏற்கனவே 3 நபர்  குழு மூலம் கையாளப்பட்டு வரும் வங்கிக்  கணக்கில் செலுத்துவது எனவும், வங்கிக் கணக்கில் உள்ள தொகையை கையாளுதல் தொடர்பாக 6 நபர் கொண்ட குழுவைச் சேர்ந்த, அனைவரின் ஒப்புதலைப் பெற்று தொகையை கையாளுவது எனவும் இறுதி முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதால், சுமூக முடிவு எட்டப்பட்டது. மேற்கண்ட அமைதி பேச்சுவார்த்தையை மீறி பொது அமைதிக்கு பங்கம் விளை விக்கும் வகையில், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை  ஏற்பட்டால், அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. இதில் மண்டல துணை தாசில்தார் பிரபு, சரக ஆர்.ஐ.கணேஷ்குமார், வி.ஏ.ஓ ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமதாஸ்,  பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்றும், நாளையும்  மணியாச்சி - ஒட்டநத்தம்  ரயில்வே கேட்டுகள் மூடல்

தூத்துக்குடி, ஏப்.28 - மணியாச்சி  - ஒட்டநத்தம் ரயில்வே கேட்டுகள் திங்கள்  (ஏப்.29) முதல் 2 நாட்கள் மூடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி ரயில் நிலையம் மற்றும் மணியாச்சி  - ஒட்டநத்தம் சாலையில் உள்ள ரயில்வே கேட் எண். 469 மற்றும் 469a ஆகிய இரு ரயில்வே  கேட்டுகளும் அவசர தண்டவாள பராமரிப்பு பணி காரண மாக ஏப்.29 (திங்கள்) மற்றும் ஏப்.30 (செவ்வாய்) ஆகிய இரு நாட்களும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை  மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜன்னல் கதவுகள் விழுந்து கட்டுமானத் தொழிலாளி பலி

குழித்துறை, ஏப்.28- கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே சரல் ஐயா கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்நாடார். இவ ரது மகன் ராதாகிருஷ்ணன் (34) கட்டுமான தொழிலாளி யான இவரது வீட்டின் பின்புறம், கடந்த ஏப்.23 அன்று  மின்விளக்கு எரியவில்லை. இதனை சரி செய்வதற்காக ராதாகிருஷ்ணன் வீட்டுச் சுவரில் சாய்த்து வைத்திருந்த ஜன்னல் கதவுகள் மேல் ஏறினார். ஆனால் ஜன்னல்  கதவுகள் திடீரென்று சாய்ந்து ராதா கிருஷ்ணனின் வயிற்றுப் பகுதியில் விழுந்ததில் அவர் படுகாய மடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு பக்கத்தில் உள்ள மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி யில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராதா கிருஷ்ணன்  பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது தாயார் ராஜம், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார்  செய்ததன் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேம்பாலம் தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து

தூத்துக்குடி, ஏப்.28 - தூத்துக்குடியில் மேம்பாலத்தில் தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்ட  வசமாக உயிர்தப்பினர். மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்பட்ட  அரசு பேருந்து ஞாயிறன்று அதிகாலை தூத்துக்குடி-திருச் செந்தூர் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த  பேருந்தில் நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த முருகப்பெருமாள் (43) ஓட்டுநராகவும், முத்து செல்வம் நடத்துநராகவும் பணியில் இருந்தனர். பேருந்தில் 37 பேர் பயணித்தனர். இந்நிலையில், ஞாயிறன்று காலை 3.50 மணியளவில் தூத்துக்குடி எம்ஜிஆர் நகர் மேம்பாலத்தில் செல்லும் போது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்  சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதில், 37 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  உடனடியாக பயணிகள் மாற்று பேருந்து மூலம் திருச் செந்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தூத்துக் குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

ஆசிரியர் வீட்டில் 68 பவுன்  நகை கொள்ளை: 2 பேர் கைது

தூத்துக்குடி, ஏப்.28 - கோவில்பட்டியில் ஆசிரியர் வீட்டில் 68 பவுன் தங்க  நகை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது  செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோவில் தெருவில் குடியிருப்பவர் சதீஷ்குமார் (43). இவர் திருமங்கலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  மார்ச் 31 அன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து 68  பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்  சென்றனர். இதுதொடர்பாக ஆசிரியர் சதீஷ்குமார், கோவில் பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில்  விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மதுரை யில் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டதாக கிருஷ்ணா புரம் காலனி 8-வது தெருவைச் சேர்ந்த வைரமணி (25),  மதுரை மாவட்டம் உத்தங்குடி, வளர்நகர் அம்பலகாரன் பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (35) ஆகியோரை மதுரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர்கள் 2 பேரும் கோவில்பட்டி சுபா நகரில் ஆசிரியர் வீட்டில் 68 பவுன் நகையை கொள்ளை யடித்ததாக கூறினர். இதுதொடர்பாக மதுரை உயர்நீதி மன்றம் மூலம் வாலிபர்கள் வைரமணி, கார்த்திக் ஆகிய  இருவரையும் கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், காவலில் எடுத்து விசாரணை நடத்தி  வருகிறார்.  இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தங்க நகைகள்  மீட்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தரப்பில் கூறப் பட்டது.

கள்ள நோட்டு வழக்கு:  முதியவருக்கு 10 ஆண்டு சிறை

தூத்துக்குடி, ஏப்.28 - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு பங்களா வில் கடந்த 2000 ஆம் ஆண்டு கள்ள நோட்டுகள் அச்சடிக் கப்படுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன் பேரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், தூத்துக்குடியை சேர்ந்த மூர்த்தி என்ற குருமூர்த்தி (65) மற்றும் ரமேஷ், நித்தியதரன், ஜெயக்குமார், மணி ஆகி யோர் கள்ள நோட்டுகள் அடித்து புழக்கத்தில் விடுவது  தெரியவந்தது. இதுதொடர்பாக குருமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீதும்  2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை  கைது செய்தனர். மேலும் அங்கிருந்த கள்ள நோட்டுகள் 1,63,790-ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்த வழக்கு  விசாரணை கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இதில் குருமூர்த்தி தவிர மற்ற அனை வரும் இறந்துவிட்டனர். வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட குருமூர்த்திக்கு 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டு கள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில்  வழக்கறிஞர் சம்பத்குமார் ஆஜரானார்.

வி.கே.புரம் அருகே  ஊருக்குள் புகுந்து ஆட்டை கடித்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

திருநெல்வேலி, ஏப்.28- திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை  அடிவாரப் பகுதிகளையொட்டி அமைந் துள்ள கிராமங்களுக்குள் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி மலையில் இருந்து வந்து, குடியிருப்புகளில் வளர்க்கப்படும் ஆடு, நாய் உள்ளிட்டவற்றை கடித்து இழுத்து செல்லும் சம்பவங்கள் நிகழ் கின்றன. இந்நிலையில் சனிக்கிழமை இரவு  வி.கே.புரம் அருகே உள்ள வேம்பை யாபுரத்தில் அய்யப்பன் என்பவர் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டை  கடித்துவிட்டு, அங்கு நின்று கொண்டி ருந்த நாயை சிறுத்தை ஒன்று கடித்து  தூக்கிச் சென்றது. இதுகுறித்து அய்யப் பன் பாபநாசம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் சத்தியவேல் தலைமை யிலான வனத்துறையினர் அங்கு வந்து  சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு  செய்தனர். மேலும் சிறுத்தையிடம் கடிபட்ட ஆட்டிற்கான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். சிறுத்தையின் காலடித் தடங்கள் வேறு எங்கேனும் உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.  அதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக வேம்பையாபுரம் ஊருக்கு சற்று தொலைவில், வனப் பகுதி  ஆரம்பிக்கும் இடத்தில் சிறுத்தையை  பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ள னர். அப்பகுதி மக்கள் அச்சத்தோடு  இருப்பதால், அங்கு வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

தூத்துக்குடி-கோயம்புத்தூர்  ரயில் சேவையை மீண்டும்  தொடங்க கோரிக்கை

தூத்துக்குடி, ஏப்.28 - தூத்துக்குடி - கோயம்புத்தூர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் ஏ. சங்கர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள மனுவில், “எம்பவர் இந்தியா என்பது கடந்த 33  ஆண்டுகளாக அடித்தட்டு சமூகங்களில் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பாகும். UNEP&UNCCD அங்கீகாரம் பெற்றது மற்றும் தமிழ்நாடு அர சாங்கத்தின் சிறந்த நுகர்வோர் VCO விருதைப் பெற்றது. UN  ECOSOC உடன் சிறப்பு அந்தஸ்தும் உள்ளது. தூத்துக்குடி ரயில் பயணிகளுக்காக பின்வரும் கோரிக் கைகளை முன் வைக்கிறோம். “கொரோனா காலத்தில் நிறுத்தப் பட்ட தூத்துக்குடி - கோயம்புத்தூர் ரயில் சேவைகளை மீண்டும்  தொடங்க வேண்டும். தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத்  ரயில் சேவைகளை தொடங்க வேண்டும். ஏற்கனவே ரயில்வே  வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி - மேட்டுப்பாளை யம், தூத்துக்குடி - பாலருவி மற்றும் தூத்துக்குடி - பாலக்காடு  ஆகிய ரயில் சேவைகளை தொடங்க வேண்டும்” என கோரிக்கை  விடுத்துள்ளார்.

பைக் விபத்தில்  ரேசன் கடை ஊழியர் பலி

தூத்துக்குடி, ஏப்.28 - தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமம்  சந்திதெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் (50). இவர் கயத்தாறு மற்றும் தலையால் நடந்தான்குளம் கிராமத்திற்கு ரேசன் கடையில் வேலை செய்து வந்தார்.  இந்நிலையில் சனிக்கிழமை காலை 9  மணியளவில் அய்யனார்ஊத்து கிரா மத்தில் இருந்து கயத்தாறுக்கு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். காற்றாலை அருகே கயத்தாறு  - தேவர்குளம் சாலையில் சென்றபோது பைக் திடீரென நிலை தடுமாறி விபத்துக் குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அருணாசலத்தை 108 ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரி ழந்தார். இதுகுறித்து கயத்தாறு காவல் ஆய்வாளர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

வாசுதேவநல்லூர் உப மின் நிலையத்தில் தீ விபத்து

தென்காசி, ஏப்.28 - தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மின்சார வாரியம், கடையநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட வாசுதேவநல்லூர் உபமின் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பவர் மின்மாற்றியில் சிந்தடிக் ஆயில் ஊற்றி இருந்ததால், வெப்பம் அதிகமாகி தீப்பிடித்துள்ளது. உடனே வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வாசுதேவநல்லூர் கடையநல்லூர் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இந்தப் பணியில் தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா, போக்குவரத்து அலுவலர் முருகன், கடையநல்லூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சேக் அப்துல்லா, போக்குவரத்து அலுவலர் ஜெயராஜ் மற்றும் வீரர்கள் ஈடுபட்டனர். தீ விபத்து நிகழ்ந்த உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டு, வேறு இடத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், தீப்பற்றி எரிந்த பவர் மின்மாற்றிக்கு பதிலாக, புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி
நாகர்கோவிலில் இன்று முன்பதிவு தொடக்கம்

நாகர்கோவில், ஏப்.28 - நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி துவங்கப்பட உள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:  நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்வதற்கு மாணவர்கள்  ஏப்.29 முதல் மேலாண்மை நிலையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 12 ஆம்  வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் பட்டதாரி கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. இப்பயிற்சி வரும் செப்டம்பர் மாதம்  முதல் துவங்கி ஓராண்டு காலம் இரண்டு பருவ  முறைகளில் நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.  பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்ப தேதி மற்றும் பயிற்சி கட்டண விவரங்கள் விரை வில் தெரிவிக்கப்படும். பயிற்சியில் சேர்வதற் கான நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படும். இக்கூட்டுறவு மேலாண்மை பயிற்சி யில் சேர்வதற்கு, www.mcuicm.com என்ற   இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க  வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04652- 278132 என்ற எண்ணில் அல்லது நாகர்கோ வில் கூட்டுறவு மேலாண்மை நிலையம், கிறிஸ்டோபர் தெரு, நேசமணி நகர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;