districts

img

மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 6 ஆவது இடம்

திருச்சிராப்பள்ளி, மே 26 - பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை நடைபெற்றன. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் திங்களன்று வெளியிடப்பட்டன. 

திருச்சியில் 95.74 சதவீதம் பேர் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் மாணவர்கள்  13,371, மாணவிகள் 16,244 என மொத்தம் 29,615 பேர் தேர்வு எழுதி னர். இதில் மாணவர்கள் 12,491 பேர் (93.42 சதவீதம்), மாணவிகள் 15,863 (97.65 சதவீதம்) என மொத்தம் 28.354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது  95.74 சதவீத தேர்ச்சியாகும். அந்த வகையில், திருச்சி மாவட்டத் தில் அரசுப் பள்ளிகளில் பயின்று தேர்வு  எழுதிய 4,775 மாணவர்களில், 4253 பேரும், மாணவியர் 5,589 பேரில் 5,329  பேரும் என மொத்தம் 10,364 பேரில் 9,582 பேர் (92.45 சதவீதம்) தேர்ச்சி பெற் றுள்ளனர்.

மாநில அளவில் 13 ஆவது இடம்

திருச்சி மாவட்டம் தமிழக அளவில்  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி யில் 13 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2021-22 கல்வியாண்டில் 95.93 சதவீ தத்துடன் 12 ஆவது இடத்திலும், 2022- 23 கல்வியாண்டில் 96.02 சதவீதத்து டன் 13 ஆவது இடத்திலும் இருந்தது.  நிகழாண்டும் 95.74 சதவீத தேர்ச்சியை  பெற்று, 13 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 96.44 சதவீதம் தேர்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் 96.44 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 3,499 மாண வர்களும், 3,502 மாணவிகளும் என  மொத்தம் 7001 பேர் எழுதினர். இதில்  3,342 மாணவர்களும், 3,410 மாணவி களும் என மொத்தம் 6,752 மாணவர்கள்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்  பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளி கள், அரசு உதவிபெறும் மற்றும் தனி யார், சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம்  79 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலை  யில், மொ த்தம் 38 பள்ளி கள் 100 சத வீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.  இதில் ரஞ்சன்குடி, வாலிகண்ட புரம், எளம்பலூர், கவுள்பாளையம், நெற்குணம், பேரளி, பூலாம்பாடி, அனுக் கூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளி களும், கிழுமத்தூர் மற்றும் பெரம்ப லூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி களும் என மொத்தம் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியும், 2  அரசு உதவிபெறும் பள்ளிகள், 17 தனி யார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்,  8 சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 38 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இயற்பியலில் 11 பேரும், வேதியி யலில் 7 பேரும், உயிரியலில் 19 பேரும்,  கணிதத்தில் 79 பேரும், வணிகவியலில்  17 பேரும், கணக்கியலில் ஒருவரும், பொருளாதாரத்தில் 2 பேரும், விலங்கி யலில் 3 பேரும், கணினி அறிவிய லில்  65 பேரும், வணிக கணி தத்தில் ஒருவ ரும், வேளாண் கோட்பாட்டு பாடத்தில்  56 பேரும் நூற்றுக்கு நூறு மதிப் பெண் பெற்றுள்ளனர்.

மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2  பொதுத்தேர்வில் மாணவர்களை விட  மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 3,52,165 மாணவர்களும், 7,60, 606 மாணவிகளும் எழுதியிருந்தனர். அதில் 3,93,390 மாணவிகளும், 3,25,305  மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தமிழக அளவில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள் ளனர்.  பெரம்பலூர் மாவட்டத்தில் 3499 மாணவர்கள், 3502 மாணவிகள் என  மொத்தம் 7,001 பேர் தேர்வு எழுதினர். அதில் 3342 மாணவர்கள், 3410 மாண விகள் என 6752 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்  95.51, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம்  97.37 என உள்ளது.  இதனால் மாண வர்களை விட மாணவிகளே அதிகள வில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.  ஆனாலும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் கடந்த  ஆண்டு 3ஆம் இடத்தில் இருந்த நிலை யில், இந்தாண்டு 6 ஆம் இடம் பிடித்து  பின்னோக்கிச் சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது. 

மயிலாடுதுறை: 3 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்  தேர்வில் மயிலாடுதுறை மாவட்டம் 92.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தரங்கம்பாடி வட்டம், தில்லையாடி கிராமத்திலுள்ள தியாகி தில்லை யாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்  பள்ளி, குத்தாலம் வட்டம் தேரழந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப் பள்ளி, சீர்காழி வட்டம் மாதானம் அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி ஆகிய அரசுப் பள்ளிகளில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று, 3 பள்ளி களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளது. தில்லையாடி பள்ளியில் ஐ. அக்ஷயா என்ற மாணவி 451 மதிப்பெண்  பெற்று பள்ளி அளவில் முதலிடமும், ஜா.உதயா என்ற மாணவன் 445 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், வி.வைஷாலி என்ற மாணவி 439 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர், பெற்றோர், ஆசிரி யர் கழகத்தினர், பெற்றோர்கள், ஆசிரி யர்கள், அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். திருவாரூரில்  93.08 சதவீதம் பேர் தேர்ச்சி திருவாரூர் மாவட்டத்தில் 5,439 மாணவர்கள், 6,794 மாணவிகள் என  மொத்தம் 12,233 பேர் தேர்வு எழுதினர்.  இதில், 4,913 மாணவர்கள், 6,473 மாண விகள் என மொத்தம் 11,386 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 90.33 சதவீ தம், மாணவிகள் 95.28 சதவீதம் என மொத் தம் 93.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். கடந்த ஆண்டை விட 1.62 சத வீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று, மாநில அளவில் தற்போது 28 ஆவது  இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு  29 ஆவது இடத்தில் இருந்தது குறிப் பிடத்தக்கது.

புதுக்கோட்டை:  93.79 சதவீதம் தேர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,083 மாணவர்கள், 9,737 மாணவிகள் என  மொத்தம் 17,820 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 7,355 மாணவர்கள், 9,359 மாணவிகள் என மொத்தம் 16, 714 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.79  சதவீதமாகும். மாநில அளவிலான தேர்ச்சி விகிதப்படி, புதுக்கோட்டை மாவட்டம் 24-ஆவது இடத்தில் உள்ளது. நூற்றுக்கு நூறு... மாவட்டத்தில் புள்ளியியல் பாடத்தைத் தேர்வு செய்திருந்த 123  பேரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல, நுண் உயிரியல் எழுதிய 85 பேரும், பொது செவிலியர் எழுதிய 232 பேரும், உயிர் வேதியியல் எழுதிய 14  பேரும், அரசியல் அறிவியல் எழுதிய 119 பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 96.97 சதவீதமும், முழுமையான உதவி பெறும் பள்ளிகளில் 94.73 சதவீதமும்,  அரசுப் பள்ளிகளில் 91.80 சதவீதமும், பகுதி அரசு உதவி பெறும் பள்ளி களில் 98.14 சதவீதமும், சுயநிதிப் பள்ளி களில் 96.68 சதவீதமும், சுயநிதி (மெட் ரிக்) பள்ளிகளில் 99.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் முன்னிலை

மாநிலத்தில் அனைத்துப் பள்ளி களையும் சேர்த்த தேர்ச்சி விகிதத்தின் படி, புதுக்கோட்டை மாவட்டம் 93.79  சதவீதம் எடுத்து, 24 ஆவது இடத்தில்  உள்ளது. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகள் அளவில் 91.83 சதவீதம் எடுத்து,  மாநிலத்தில் 18 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த கல்வியாண்டில் புதுக் கோட்டை மாவட்டம் 91.58 சதவீதம்  தேர்ச்சி பெற்றிருந்தது. தற்போது, 93.79 சதவீதம் தேர்ச்சி பெற்று சற்றே முன் னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி, மாங்காடு அரசு மேல் நிலைப் பள்ளி, நெடுவாசல் அரசு மேல் நிலைப் பள்ளி, கரூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரிமளம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி, மண்ணவேலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, மருதாந்தலை  அரசு மேல்நிலைப் பள்ளி, நார்த்தா மலை அரசு மேல்நிலைப் பள்ளி, சந்தைப் பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 அரசுப் பள்ளிகள் நூறு  சதவீதம் தேர்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

பாபநாசம்

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வெழுதிய தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 80 பேரில் 79 பேர் தேர்ச்சி பெற்றனர்.  550 மதிப்பெண் பெற்று பிரவீன் முத லிடமும், 546 மதிப்பெண் பெற்று சிவானி ஸ்ரீ 2 ஆம் இடமும், 542 மதிப் பெண் பெற்று சரத் 3 ஆம் இடமும் பெற்றனர். கணினி அறிவியலில் ஐஸ் வர்யா நூறு மதிப்பெண் பெற்றார்.  தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி தலைமையாசிரியர் தீபக்  மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.  மெலட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 67 பேரில், 55 பேர்  தேர்ச்சி பெற்றனர். அபிதா 501 மதிப் பெண் பெற்று முதலிடமும், கவிமணி  487 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடமும்,  அனுஸ்ரீ 481 மதிப்பெண் பெற்று 3 ஆம்  இடமும் பிடித்துள்ளனர். தேர்வெழு திய பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 113  பேரில் 97 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.  இதில் கண்ணன் 530 மதிப்பெண்  பெற்று முதலிடத்திலும், சூர்யா 519  மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தி லும், வேல்முருகன் 479 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்திலும் உள்ளனர்.  அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி  மாணவிகள் 223 பேர் தேர்வெழுதிய தில் 203 பேர் தேர்ச்சிப் பெற்றனர். மது மிதா 556 மதிப்பெண்களுடன் முதலிடம்,  முகிலரசி 552 மதிப்பெண்களுடன் 2  ஆம் இடம், வர்சினி 551 மதிப்பெண் களுடன் 3 ஆம் இடத்தில் பெற்றனர். கணினி பயன்பாட்டியலில் 2 பேர்,  பொருளாதாரத்தில் 2 பேர், தாவரவி யல், வணிகவியலில் தலா ஒருவர் என  மொத்தம் 6 மாணவர்கள் நூறுக்கு நூறு  மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ரஹ்மத் மெட்ரிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

முத்துப்பேட்டை, மே 6- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத  தேர்ச்சியை பெற்று தொடர் சாதனை புரிந்துள் ளது.  2004 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 20 ஆண்டுகளாக இப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில்  முழு தேர்ச்சி பெற்று சாதனை படைத்து  வருகிறது. இப்பள்ளியின் மாணவி எம்.ஷிபா 576 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 573 மதிப்பெண்கள் பெற்று எம்.ஷாபிரா பானு   2 ஆம் இடத்தையும், 570  மதிப்பெண்கள்  பெற்று எம்.ரஹீமா சுல்தானா 3 ஆம் இடத்தை யும் பெற்றுள்ளனர். பொருளாதாரப் பாடத்தில் நான்கு  மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்க ளும், வணிகவியலில் எம்.ஷாபிரா பானு  நூறு மதிப்பெண்ணும், கணினி அறிவியல் பாடத்தில் எஸ்.சங்கவி நூறு  மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்ணுக்கு மேல் 6 மாணவிகளும், 450-க்கு மேல் 29 மாண விகளும், 400-க்கு மேல் 47 மாணவிகளும் மதிப் பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளை, திருவாரூர் மாவட்ட கல்வியாளர்கள், முன்னாள்  மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

சுவாமி தயானந்தா கல்வி குழும மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி

திருவாரூர், மே 6 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் அமைந்துள்ளது சுவாமி தயானந்தா கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான சுவாமி தயானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுவாமி தயானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 12 ஆம் வகுப்பில் 64 மாணவர்கள் பயின்றனர். இவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் இதில் 7 மாணவர்கள் கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர்  எம்.ஜி.சீனிவாசன் மற்றும் முதல்வர் ருக்மணி, பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மஞ்சக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் டி.டி.நரசிம்மன் தயானந்தா சுவாமி மேல்நிலைப் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 146 பேரில், 133 மாணவர்கள் வெற்றி பெற்று 91.09 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதேபோல் செம்மங்குடியில் உள்ள சுவாமி தயானந்தா மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மூவேந்தர் பள்ளி  100 சதவீதம் தேர்ச்சி 

மூவேந்தர் பள்ளி  100 சதவீதம் தேர்ச்சி  தஞ்சாவூர், மே 6 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இப்பள்ளியில் தேர்வு எழுதிய 151  பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பி யல் பாடத்தில் 5 பேரும், வேதியியல் பாடத்தில் 6 பேரும், கணிதப் பாடத்தில் 5  பேரும், விலங்கியல் பாடத்தில் 7 பேரும்,  கணினி அறிவியல் பாடத்தில் 15 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  இதில், மாணவர் எம்.விவாசன் 581  மதிப்பெண்களுடன் முதலிடமும், மாணவி ஜெ.இனியா 580 மதிப்பெண் களுடன் இரண்டாம் இடமும், மாணவி கள் ஆர்.தேவகாஞ்சனா, கே.அட்சயா  ஆகியோர் தலா 578 மதிப்பெண்களு டன் மூன்றாம் இடமும் பெற்றனர்.  பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 55 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல்  பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளா ளர் வழக்குரைஞர் வி.ஏ.டி.சாமியப்பன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
 

;