districts

img

நீல ஒட்டுப் பொறிகளின் பயன்பாடு: வேளாண் மாணவர்கள் விளக்கம்

தஞ்சாவூர், ஏப்.29-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம், செருவாவிடுதி வடக்கு கிரா மத்தில், வேளாண் மாணவர்கள் பணி அனு பவ களப்பயிற்சி பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பயிலும், இறுதி ஆண்டு மாணவர்கள் செருவாவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் நெற்பயிர் சாகுபடி குறித்தும், பூச்சி  மேலாண்மையில் நீல ஒட்டும் பொறியின் பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  மேலும் தங்கள் பேராசிரியர்கள் செல்வஅன்பரசு (மண் அறிவியல் துறை)  மற்றும் அண்ணாசாமி (தோட்டக்கலைத் துறை) ஆகியோரின் ஆலோசனையுடன், மாணவர்கள் விவசாயிகளுடன் கலந்து உரையாடினர்.  அப்போது அவர்கள் விவசாயிகளிடம் கூறுகையில், “நீல நிற ஒட்டும் பொறி  இலைப்பேன், முட்டைக்கோசு ஈ, வெள்ளை  நிற ஒட்டும் பொறி மற்றும் ஆரஞ்சு நிற  ஒட்டும் பொறி தத்துப் பூச்சிகள், பச்சை நிற  ஒட்டுப் பொறி பழ ஈ, பருத்திக்காய் கூண் வண்டு ஆகிய பூச்சிகளை பிடித்துக் கொள்ளும். காய்கறி தோட்டங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒட்டுப் பொறி களை பொருத்தினால், பூச்சிகள் அதில்  எளிதாக சிக்கிவிடும். இதனால் காய்கறிப்  பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருப்பது டன், நோய் தாக்காமல் இருக்கும். மேலும் ரசாயனங்கள் கலந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிப்பது தடுக்கப் படும். இதனால் பூச்சி மருந்து அடிக்க வேண்டிய செலவு மிச்சமாகும். மண்ணில்  தாதுச் சத்துகள் அழியாமல் இருக்கும். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு தனி வரவேற்பு உள்ளது.  இந்த நீலப் பொறிகளை பயிர்களின் இடப்பரப்புக்கு மேல் இருக்கும்படி பொருத்த வேண்டும். இதில் பயிர்களை தாக்கும் பூச்சி இனங்கள் ஒட்டுப்பொறி களில் சிக்கிக் கொள்ளும். இயற்கை விவசாயத்திற்கு இந்த ஒட்டுப்பொறி கை  கொடுத்து வருகிறது. இதனால் விவசாயி கள் அதிகளவில் இதனை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.  எள், கடலை, உளுந்து பயிர்களிலும்,  நெல் பயிர் சாகுபடியிலும் இந்த ஒட்டுப் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அரசின் சார்பிலும் மானியத்தில் ஒட்டுப் பொறிகள் வழங்கப்பட்டு வரு கின்றன” என்றனர்.

;