districts

img

12 ஆம் வகுப்பில் 94.56 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

சென்னை, மே 6 - தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு  பொது தேர்வு முடிவுகள் திங்களன்று (மே 6) வெளியிடப்பட்டது. இதில் 94.5 6 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 வரை நடந்து முடிந்தது. இதையடுத்து மாணவர் களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல்  1ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி  வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவுபெற்றது.

இந்நிலையில், திட்டமிட்டபடி மே 5 திங்களன்று காலை 9.30 மணிக்கு சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழ கன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது. வழக்கமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தான்  தேர்வு முடிவுகளை வெளியிடுவார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்ப தால், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளி யிட்டார். அதன்படி,மொத்தம் 94.56 விழுக்காடு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் முதலிடம்
கடந்த 2023 ஆம் ஆண்டு 8 லட்சத்து 3 ஆயிரத்து 395 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7, 55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி  விழுக்காடு 94.03 விழுக்காடாக இருந்த நிலை யில், இந்த முறை 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 மாணவர்கள், 3 லட்சத்து 52 ஆயிரத்து 165  மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் ஆக மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இவர்களில் மாணவிகள் 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 96.44 அதே நேரத்தில் 3  லட்சத்து 25 ஆயிரத்து 35 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களைக் காட்டி லும் 4.07 விழுக்காடு தேர்ச்சி விகிதம் குறை வாகும். வழக்கம் போல் இந்த முறையும் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் -  மூன்றாம் பாலினத்தவர்!

தமிழ்நாடு முழுவதும் 5,603 மாற்றுத்திற னாளிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 5,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேர்ச்சி விழுக்கா ட்டில் 92.11 ஆகும். அதேபோல் சிறைவாசிகள் 125 பேர் தேர்வு எழுதியதில் 115 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 92ஆகும்.
மேலும், சென்னை லேடி வில்லிங்டன் அரசு  மேல்நிலைப்பள்ளியில் படித்து தேர்வு எழுதிய ஒரே நபரான மூன்றாம் பாலினத்தை சேர்ந்த  நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள் ளார்.

திருப்பூர் சாதனை!
திருப்பூர் மாவட்டத்தில் 10,810 மாண வர்கள், 13,039 மாணவிகள் என மொத்தம் 23,849 பேர் எழுதினர். இதில் 23,242 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். 97.45  விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை மாநிலத்தில் முதல் இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம் தற்போது மூன்றாவது முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்திருக்கிறது.

இதேபோல் அரசு பள்ளிகள் அளவில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 77 அரசு  பள்ளிகள் உள்ளன. இதில் 4,548 மாணவர்கள், 5,935 மாணவிகள் என மொத்தம் 10,483 பேர்  எழுதினர். இதில் 4,274 மாணவர்கள் 5,763 மாணவிகள் என மொத்தம் 10,037 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 97.75 சத வீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளி  கல்வித்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 20,678 (97.42) மாண வர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் இரண்டா வது இடம் பிடித்துள்ளனர். சிவகங்கை 14,540 (97.42), அரியலூர் 7,992 (97.25),கோவை 32.387  (96.97), விருதுநகர் 20,562 (96.64), பெரம்பலூர் 6,752 (96.64), திருநெல்வேலி 18,509 (96.44), தூத்துக்குடி 17,908 (96.39), நாமக்கல் 16,586 (96.10), தென்காசி 15,301 (96.07), கரூர் 9,086 (95.90), திருச்சி 28,354 (95.74), கன்னியாகுமரி 20,637 (95.72), திண்டுக்கல் 18,134 (95.40), மதுரை 32,064 (95.19), ராமநாதபுரம் 12,857 (94.89), செங்கல்பட்டு 23,907 (94.71), தேனி 11,936 (94.65), சேலம் 33,022 (94.60), சென்னை 57,325 (94.48), ஊட்டி 5,740 (94.27), கடலூர் 26,911 (94.36), புதுக்கோட்டை 16,714 (93.79), தரும புரி 17,228 (93.55), தஞ்சாவூர் 24,052 (93.46), விழுப்புரம் 19,764 (93.17), திருவாரூர் 11,386( 93.08)ஆகிய மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

கள்ளக்குறிச்சி 15,978 (92.91), வேலூர் 12,524 (92.53), மயிலாடுதுறை 8,909 (92.38), திருப்பத்தூர் 11,361 (92.34) காஞ்சிபுரம் 11455 (92.28),  ராணிப்பேட்டை 11,444 (92.28), கிருஷ்ண கிரி 17,339 (91.87), திருவள்ளூர் 23,401 (91.32),  நாகப்பட்டினம் 6,242 (91.19), திருவண்ணா மலை 24,021 (90.47) ஆகிய மாவட்டங்கள் கடைசி 10 இடங்களை பிடித்துள்ளன.

பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி!
அறிவியல் பாடப்பிரிவில் தேர்வு எழுதிய மாணவர்கள் 4 லட்சத்து 80 ஆயிரத்து 961.  இதில் தேர்ச்சி பெற்றது ஆண்கள் 2 லட்சத்து  5 ஆயிரத்து 562, பெண்கள் 2 லட்சத்து 63 ஆயி ரத்து 514.  மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். ஒட்டுமொத்தமாக தேர்ச்சி விழுக்காடு 96.35.

வணிகவியல் பாடப்பிரிவு 2,28,804 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இவர் களில் பெண்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 418 பேரும் ஆண்கள் 99 ஆயிரத்து 127 பேரும் ஒட்டு மொத்தமாக 2,11,545 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். 92.46 விழுக்காடு தேர்ச்சி விகிதமாகும்.

கலைப் பிரிவு பாடத்தில் ஒட்டுமொத்தமாக 11,585 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 616  பெண்களும் 3,909 ஆண்களும் ஒட்டுமொத்த மாக 9,925 பேர் தேர்ச்சி பெற்றனர் இது தேர்ச்சி விகிதம் 85.6 7 விழுக்காடு.

தொழிற் பாடப்பிரிவில் 33 ஆயிரத்து 256 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதி னர். அவர்களில் 16,67 ஆண்களும் 11,942 பெண்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு 85.85 ஆகும்.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் இந்த நான்கு பிரிவு பாடங்களில் 3 லட்சத்து 52  ஆயிரத்து 165 ஆண்களும் 4 லட்சத்து 8 ஆயி ரத்து 440 பெண்களும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்வு எழுதினர். இவர்களில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 35 ஆண்களும்  3 லட்சத்து 93 ஆயிரத்து 890 ஆண்களும் ஒட்டு மொத்தமாக 7, 19, 196 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

முக்கிய பாடங்கள்
இயற்பியல்  98.48 விழுக்காடு, வேதியியல் 99.14 உயிரியல் 99.35,  கணிதம் 98.57, தாவர வியல் 98.86,  விலங்கியல் 99.04,  கணினி அறிவியல் 99.80,  வணிகவியல்  97.77, கணக்குப்பதிவியல் – 96.61

தேர்வில் சாதித்த சிறைவாசிகள்!
 மதுரை மத்திய சிறையில் 15 தண்டனை சிறைவாசிகள் 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 15 பேரும் தேர்ச்சி அடைந்துள் ளனர். இதில் சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சிறைவாசி அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண் குமார் என்பவர் 506 எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு  மே 7 முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது பள்ளிகள் மூலமும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால் விடைத்தாள் நகல் பெறவோ விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மறுதேர்வு எப்போது.?
இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாண வர்கள் செவ்வாய்க்கிழமை முதல் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், உடனடி தேர்வுகள் குறித்த தேதி அறிவிப்பு வெளி யிடப்படும் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

மேலும்,  மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9 ஆம் தேதி வழங்கப் படும், அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

100க்கு 100 மதிப்பெண்கள்!
கணினி அறிவியல் 6996, வணிகவியல் 6142, பொருளியல் 3299, கணிதம் 2587,கணினி பயன்பாடுகள் 2251,கணக்குப்பதிவியல் 1647, உயிரியல் 652, இயற்பியல் 633,வேதியியல் 471,விலங்கியல் 382, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் 210, தாவரவியல் 90, தமிழ் 35, ஆங்கிலம் 7. அரசியல் அறிவியல் 3 ஆகிய பாடங்களில்  நூற்றுக்கு  நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், நுண்ணுயிரியல்,கம்யூனிகேசன் ஆங்கிலம், ஆங்கிலம் மற்றும் இந்திய கலாச்சாரம், அட்வான்ஸ் தமிழ் ஆகிய பாடங்களில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை.

அரசுப் பள்ளிகள் சாதனை!

தமிழ்நாடு முழுவதும் 7,523 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதியவர்களில் 2,478 பள்ளிகளில் ஒட்டுமொத்தமாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 397 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகள்  95.49 விழுக்காடும், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.70, இரு பாலர்களும் படிக்கும் பள்ளிகள் 94.78 பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகள் 96.39, ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகள் 88.98 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.
 

;