districts

img

கடலில் உயிரிழந்த பயிற்சி மருத்துவர்கள் உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில், மே 7- கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் கடல் சீற்றத்தால் எழுந்த அலையில் சிக்கி உயிரிழந்த 5 பயிற்சி மருத்துவர்களின் உடல்கள் அவர் களது பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டு  சொந்த ஊருக்கு கொண்டு செல்லப் பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் மே 6 திங்களன்று காலை திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரி யில் பயிலும் மாணவர்கள் கால் நனைப் பதற்காக கடலில் இறங்கினர். அப் போது எதிர்பாராதவிதமாக கடல் அலை அவர்களை இழுத்துச் சென்றது. கட லோர காவல் படையினரும், தீய ணைப்பு வீரர்களும் லெமூர் கடற்கரை பகுதிக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர தேடுதலுக்  குப் பிறகு காயத்ரி, சாருகவி, பிரவீன் சாம், சர்வ தர்ஷித், வெங்கடேஷ் ஆகி யோரது உடல்கள் உயிரிழந்த நிலை யில் மீட்கப்பட்டன. இவர்களது உடல் கள் கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கூராய்வுக்குப் பிறகு பயிற்சி மருத்துவர்களின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.

திங்களன்று இரவு பிரவீன் சாம், சாருகவியின் உடல்களை  பெற்றோர் வாங்கி சென்றனர். செவ்வாய்கிழமை அதிகாலை வெங்கடேஷ், காயத்ரி யின் உடல்களை அவர்களது பெற் றோர் வாங்கி சென்றனர். கடலில் மூழ்கி பலியானவர்களின் உடல்கள் - ஆம்புலன்ஸ் மூலமாக அவரவர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப் பட்டது. பறக்கை செட்டித் தெருவை சேர்ந்த சர்வதர்ஷித்தின் பெற்றோரும் சகோதரரும் வெளிநாட்டில் இருந்தனர். துயரச்செய்தி குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. துபாயில் இருந்து செவ்வா யன்று சொந்த ஊருக்கு வந்தனர். சர்வதர்ஷித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

;