districts

img

அம்பானி - அதானி வளர்ச்சிக்கே பிரதமர் மோடி ஆட்சி செய்தார்

புதுச்சேரி, மே 2 - 10 ஆண்டுகளாக அம்பானி, அதானியின் வளர்ச்சிக்காகவே ஆட்சி  செய்தவர் பிரதமர் மோடி என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

புதுச்சேரியில் புதன்கிழமை (மே 1)  அன்று சிஐடியு - ஏஐடியுசி சார்பில் 138-வது மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது:

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் அதானி, அம்பானி போன்றவர்கள் ஒரு விழுக்காட்டினர் தான். ஆனால், இந்த ஒரு விழுக்காட்டினருக் காகவே ஆட்சி செய்தவர் தான் பிரதமர் மோடி. உலக பணக்காரர்கள் வரிசையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு 609-ஆவது இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு முதல் வரிசையில் 3-வது இடத்திற்கு  வந்துள்ளார். இவரது வளர்ச்சிக்கு பிரத மர் மோடியே காரணம்.

அம்பானி, அதானி போன்ற ஒரு விழுக்காட்டினர், நாட்டின் ஒட்டுமொத்த  வளங்களில் 40 விழுக்காட்டை குவித்து வைத்துள்ளனர். காந்தி கண்ட சமத்துவ பொருளாதாரம் இன்றைக்கு மிகப்பெரிய கேள்விக் குறியாகி உள்ளது. கடந்த 10  ஆண்டுகளில் அதானி, அம்பானி போன்ற  முதலாளிகள் வாங்கிய கடன்களை மட்டும் ரூ. 16 லட்சம் கோடியை மோடி அரசு தள்ளு படி செய்துள்ளது. இதுவே சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக்காக கடன் வாங்கியிருந்தால் வட்டி, அபராத வட்டி என பல மடங்கு தொகை யை வசூலித்து இருப்பார்கள்.

இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங் களுக்காக ஆட்சி நடத்திய அரசுதான் மோடி அரசு. இன்றைக்கு நடைபெறும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை குறை கூறும் பிரதமர் மோடி, பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பற்றி பேச ஏன் பயப்படு கிறார். எந்த வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றாத மோடி அரசை தூக்கி எறிய இந்திய தொழிலாளி வர்க்கம் தயாராகி விட்டது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் பேசினார்.

முன்னதாக கூட்டத்திற்கு ஏஐடியுசி - சிஐடியு மாநில செயலாளர்கள் சேது செல்வம், ஜி.சீனுவாசன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு. சலீம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங் கம், முன்னாள் அமைச்சர் ஆர்.விசு வநாதன்,  சிஐடியு, ஏஐடியூசி நிர்வாகிகள் பிரபுராஜ், தினேஷ்பொன்னையா உட்பட திரளான தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். முன்னதாக அண்ணா சிலை எதிரில் இருந்து சாரம் ஜீவானந்தம் சிலை வரை மே தின பேரணி நடைபெற்றது.

;