districts

img

கோத்தகிரியில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து

மேட்டுப்பாளையம், மே 4- கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் - கோத்தகிரி மலைச்சாலையில் உத கைக்கு சுற்றுலா சென்று விட்டுத் திரும்  பிய வாகனம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில், ஒரு சிறுவன் பலியானார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்தனர்.

சென்னை வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வர்கள் ஒரு குழுவாக 16 பெரியவர்கள் மற்றும் 15 குழந்தைகள் என 31 பேர்  ஏப்ரல் 30 அன்று உதகைக்கு சுற்றுலா  வந்துள்ளனர். மே 1 முதல் ஆன்லைன்  மூலம் பதிவு செய்த சுற்றுலா வாகனத்தில்  (மினி பேருந்து) உதகையைச் சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளியன்று மாலை ஐந்து மணியளவில் உதகையில் இருந்து  மேட்டுப்பாளையம் திரும்பியுள்ளனர். 

அப்போது அவர்களின் வாகனம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை யில் பவானிசாகர் அணை காட்சி முனை  அருகே வந்த போது, நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்  திற்கு உள்ளானது. \

இதில், வாகனத்தில் இருந்த ஓட்டுநர்  உள்பட 32 பேரும் பலத்த காயமடைந்த னர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும்,  காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாக னங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். படு காயமடைந்த 11 பேருக்கு முதலுதவி  சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு வந்தனர். மீதமுள்ளவர்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விபத்தில் படுகாய மடைந்த சென்னை கொளத்தூர் பகுதி யைச் சேர்ந்த சர்வேஷ் என்ற 4 வயது சிறு வன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழந்தார்.

;