districts

img

போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

விருதுநகர், பிப்.24- தமிழ்நாட்டு இளைஞர்களை, மாண வர்களை, போதைக் கலச்சாரத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்துஙப பகுதிகளிலும் தாராளமாய் கிடைக்கும் மது, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தி வருகின்றனர். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு நகர் செயலாளர் தீபக்குமார் தலைமை வகித்தார். அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சத்திய ராஜ், பொறியாளர் எம்.ஊர்காவலன் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், நகர் செயலாளர் எல்.முருகன், நகர் பொருளாளர் குணசுந்தர்,  முனீஸ்வரன், பி.கருப்பசாமி, செல்வக் குமார், ரவி,  சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி, மக்கள் நீதி  மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெ.காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். விருதுநகர் நகராட்சித் தலைவர் இரா.மாதவன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

;