games

img

விளையாட்டு செய்திகள்

10 பந்துகளில் 52 ரன்கள்
41 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அசத்திய வில் ஜேக்ஸ்

விடுமுறை நாளான ஞாயி றன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் குஜ ராத் - பெங்களூரு அணிகள் மோதின. குஜராத் அணி நிர்ணயித்த 201 ரன்கள் இலக்கை, 16 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட் மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. 

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதுயாதெனில் பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கிய வில் ஜேக்ஸ் (இங்கிலாந்து) தொடக்கத்தில் 31 பந்து களில் 48 ரன்கள் குவித்து சீரான வேகத்தில் ரன் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அடுத்த சில நிமி டங்களில் ஜேக்ஸ்க்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, குஜராத் அணி யின் ஈவிரக்கமின்றி பந்துவீச்சை பந்தாடினார். மிக முக்கியமாக தான் கடைசியாக சந்தித்த 10 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ஜேக்ஸ் சதமடித்து மிரட்டினார். 10 பந்துகளில் 52 ரன்கள் குவிப்பது உலக சாதனை விஷயம் என்றாலும், ஜேக்ஸ் இதனை அரை சதத்திற்கு பிறகு விளாசிய தாலும், சதமடித்தாலும் சாதனை அம்சமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

கொளுத்தும் வெயிலால் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறியுள்ளதா?

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு பதில், பந்துவீச்சு மிஷினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை கூறும் அளவிற்கு பேட்டர்கள் ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றனர். எப்படி பந்துவீசினாலும் அசால்ட்டாக சிக்ஸர் விளாசும் நிகழ்வு நடப்பு ஐபிஎல் சீசனில் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரு கிறது. இதனால் பந்துவீச்சாளர்கள் தீவிர அழுத்தத்தில் விளையாடி வருகின்றனர். இதற்கு காரணமாக இம்பாக்ட் விதியை பெரும்பாலான வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் காலநிலையை ஐபிஎல் உலகம் மறந்துவிட்டது. நாடு முழுவதும் தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் வெப்ப அலைக்கு நிகராக வெயில் கொளுத்தி வருகிறது. இத்தகைய வெப்பநிலையால் மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. கிரிக்கெட் வரலாறு நிகழ்வுகளின்படி குளிர்கால சீதோஷ்ண நிலை பந்துவீச்சிற்கும், வெப்பமான சூழ்நிலை பேட்டிங்கிற்கும் சாதகமாக இருக்கும் என்பதால் காலநிலை மாற்றத்தால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கலாம் என்பதை ஐபிஎல் கண்டுகொள்ளாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெல்லிங்டன்
உலகக்கோப்பை டி-20 தொடர் 
நியூசிலாந்து அணி அறிவிப்பு

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் வரும் ஜூன் 1 அன்று மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி திங்களன்று அறிவிக்கப்பட்டது. வீரர்கள் விபரம் ; 

கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி.

;