games

img

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று அசத்தல்

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று அசத்தல்

18ஆவது உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் சீனாவின் முக்கிய நகரான ஷாங்கா யில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் சனியன்று நடை பெற்ற ஆடவர், மகளிர், கலப்பு பிரிவு களில் இந்திய அணி அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வென்ற நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற ஆடவர் அணி பிரிவு இறுதிச் சுற்றில் தீரஜ் பொம்மதேவரா - தருன்தீப் ராய் - பிரவின் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பிய னான தென் கொரியாவின் கிம் ஜே - கிம் ஜின் - லீ வூ ஆகியோர்அடங்கிய அணியை எதிர்கொண்டது.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற 5-1 (57-57, 57-55, 55-53) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஒலிம்பிக்கும் அம்பானி கையில்
நேரடி ஒளிபரப்பு உரிமையை பெற்றது “வியோகாம் 18”

உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 33-ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் ஜூலை 26 அன்று தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒலிம்பிக் கிராமத்தின் வெளிநாட்டு வீரர்களுக்கு தங்கும் அறைகள் பிரிப்பு வேலை மட்டுமே இன்னும் பாக்கி உள்ளன. இவை போட்டி தொடங்கும் ஒரு மாதத்திற்கு முன்பு தயார் செய்யப்படும் நிலையில், உலக நாடுகள் ஒலிம்பிக் கிற்கான வீரர் - வீராங்கனைகள் தேர்வில் தீவிர மாக களமிறங்கியுள்ளன.  இந்நிலையில், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானியின் வியாகோம் 18 (ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா, கலர்ஸ்) நெட்வொர்க் வாங்கியுள்ளது. வழக்கம் போல ஒடிடி பிரிவில் ஜியோ சினிமா இலவசமாக ஒலிம்பிக் தொடர்க ளை ஒளிபரப்பாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. 

 

;