games

img

விளையாட்டு செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று ஐபிஎல் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதல்

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், புதனன்று நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் அணியை வீழ்த்தி 5ஆவது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் அமரும் முனைப்பில் சென்னை அணியும், 4ஆவது வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் பஞ்சாப் அணியும் என இருஅணிகளும் வெற்றியில் மட்டும் குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப், கொல்கத்தா, தில்லி அணிகளின் பீல்டிங் படுமோசம்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, குஜராத் ஆகிய 5 அணிகள் பீல்டிங்கில் மிரட்டி வரும் நிலையில், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பீல்டிங்கில் ஓரளவு நன்றாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் பஞ்சாப், கொல்கத்தா, தில்லி ஆகிய 3 அணிகள் பீல்டிங்கில் மிக மோசமான அளவில் செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக பஞ்சாப் அணி வீரர்கள் பீல்டிங் என்றால் என்னவென்று தெரியாதது போல விளையாடி வருகிறார்கள். ஒரு ஆட்டத்தில் எப்படியும் 5 முதல் 6 கேட்சுகளை வீணடித்து விடுவார்கள். பீல்டிங்கில் படுமோசமாக ஆடி வரும் பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக டிரவோர் கோன்சலேவ்ஸ் (இந்தியா) உள்ள நிலையில், தில்லி அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக பிஜு ஜார்ஜும் (இந்தியா), கொல்கத்தா அணிக்கு ரயான் டென் டஸ்ட்சாத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டர்பன்
உலகக்கோப்பை டி-20 தொடர் 
தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் வரும் ஜூன் 1 அன்று தொடங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது. 

வீரர்கள் விபரம் ; எய்டன் மார்கிராம் (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர்,  ஹென்ரிச் கிளாசென், ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, ஜார்ன் போர்டுயின், மார்கோ ஜான்சன், கேசவ்  மகாராஜ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அன்ரிச் நார்ட்ஜே, காகிசோ  ரபாடா, ரியான் ரைசல்டன்.

ஐபிஎல் 2024 இன்றைய ஆட்டம்
சென்னை - பஞ்சாப்
(ஆட்டம் - 49)
இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, தமிழ்நாடு
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஜியோ சினிமா (இலவசம்)

;