games

img

விளையாட்டு செய்திகள்

பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கிய மோடி அரசு
ஊக்கமருந்து சோதனையை சுட்டிக்காட்டி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவ ரான பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக் தொட ரில் வெண்கலப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் தொடரில் பல்வேறு பதக்கங்களும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். 

கடந்த ஆண்டு மல்யுத்த தேசிய அகாடமியில் நாட்டிற்காக பயிற்சி பெற்று வந்த இளம் வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது  வீராங்கனைகள் புகார் அளித்தனர். இந்த புகாரை மல்யுத்த  சம்மேளனம், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் கண்டுகொள்ளாத நிலையில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட சர்வதேச அளவில் பதக்கங் fளை வென்ற மல்யுத்த நட்சத்திரங்கள் முன்னணியில் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்த  போராட்டம் பல மாதங்களாக நீடித்தாலும் பிரிஜ் பூஷண் தனது சொந்த கட்சி எம்பி என்பதால் அவரை பாலியல் குற்றச்சாட்டில் இருந்து பாதுகாக்க மோடி அரசு போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் மீது தடியடி நடத்தி, போராட்டக் களத்தில் இருந்து துரத்தியது.

காயம் - கங்கை - ஓய்வு
மோடி அரசின் இந்த கொடூரத் தாக்குதலில் சாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் காயமடைந் தனர். காயத்துடனேயே நாட்டிற்காக வென்ற பதக்கங் களை கங்கை நதியில் வீச மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் முயன்றனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கையால் இந்த  முடிவை கைவிட்டாலும், பஜ்ரங் புனியா தனக்கு வழங்கிய பத்ம விருதை பிரதமர் மோடியின் தில்லி இல்லத்தில் வைத்து விட்டு கண்ணீருடன் விடைபெற்றார். தொடர்ந்து  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் மல்யுத்தத்தில்  ஓய்வு பெறுவதாக அறிவித்து, கண்ணீருடன் விடைபெற்றார். இவ்வளவு அரங்கேறியும் பிரதமர் மோடி ஒன்றுமே நடக்கா தது போல அமைதி காத்து  நழுவினார். ஆனால் மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. தற்போது நடைபெற்று வரும் மக்க ளவை தேர்தல் பிரச்சாரத்தில் கூட,”மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் வன்கொடுமை தொடர் பாக பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்பி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சஸ்பெண்ட்

இதனால் மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கை யை துவங்கியுள்ளது. தில்லி ஜந்தர் மந்தர் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை தலைமை பொறுப்புடன் கவனித்த பஜ்ரங் புனியா மீது பழிவாங்கும் நடவடிக்கையாக, மார்ச் 10 அன்று சோனேபட்டில் நடந்த தேர்வு ஊக்க மருந்து சோதனையில் பஜ்ரங் புனியா  தனது சிறுநீர் மாதி ரியை வழங்கத் தவறியதால் அவரை இடைநீக்கம் செய்வதாக தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (NADA) அறிக்கையுடன் உத்தரவிட்டுள்ளது. மோடி அரசின் கட்டுப் பாட்டில் உள்ள தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறு வனத்தின் அறிக்கைக்கு நாடு முழுவதும் கண்ட னங்கள் குவிந்து வருகின்றன.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்க சதி

33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் ஜூலை மாதம் 26 அன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று மே 9 அன்று துருக்கி நாட்டில் நடைபெற உள்ள நிலையில், தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ளது. இத்தகைய சூழலில் பஜ்ரங் புனியாவை ஊக்க மருந்து சோதனையை சுட்டிக்காட்டி அவரை இடைநீக்கம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாதபடி பஜ்ரங் புனியாவை மோடி அரசு குறிவைத்துள்ளது தெளிவாக உணரப்படுகிறது.

ஐபிஎல் 2024 இன்றைய ஆட்டம்

மும்பை - ஹைதராபாத்
(55ஆவது ஆட்டம்)

நேரம் : இரவு 7:30 மணி
இடம் : வான்கடே மைதானம்,
 மும்பை, மகாராஷ்டிரா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)

;