headlines

img

புல்டோசர் ஆட்சிக்குப் புல்ஸ்டாப்!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாட்டில் காட்டாட்சி நிலவும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகார் மாநிலம் சமஸ்டிபூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பூச்சாண்டி காட்டியுள்ளார்.

ஆனால் பீகார் மக்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் யாரும் இவரது பேச்சை நம்பமாட்டார் கள். ஏனென்றால் காட்டாட்சி நடத்துவதற்கு ‘கைடு’ போடுபவர்களும் காரண கர்த்தாக்களும் பாஜக பரிவாரங்கள் தான் என்பதை உலகறியும்.

எங்கே வன்முறை தலைதூக்குகிறதோ, அங்கே பாஜக பரிவாரங்கள் காரணமாக இருக்கும் என்பது கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பலமுறை நிரூபணமாகியிருக்கிறது. அதிலும் மூலவரும் உற்சவருமாகத் திகழ்கிற மோடியும் அமித்ஷாவும் குஜராத்தின் முதல்வ ராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த காலமே அதற்கு சாட்சி.

2002 ஆம்ஆண்டு குஜராத்தில் இஸ்லாமி யர்கள் மீது இவர்கள் நடத்திய வெறியாட்டத்தை அன்றைய பிரதமரான வாஜ்பாயால் கூட சகித் துக் கொள்ள முடியாமல்தானே. ‘ராஜ தர்மத்தை’ கடைப்பிடிக்க வேண்டும் என்றார். 2 ஆயி ரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்று குவித்த காட்டாட்சியைக் கண்டு தானே, ‘இனி எந்த முகத்தோடு வெளிநாடு போவேன்’ என்று புலம்பி னார் வாஜ்பாய். 

அதையடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் தான் ‘ஒளிரும் இந்தியா’ பிரச்சாரம் செய்து ஆட்சி தொடரக் கோரியது பாஜக. ஆனால் நாட்டு மக்கள் இடதுசாரிகள் ஆதரவுடன் ஐமுகூ ஆட்சியை ஏற்படுத்தினர். அந்த ஆட்சி தானே கல்வி உரிமை சட்டம், தகவல் அறியும் சட்டம், வன உரிமை பாதுகாப்புச் சட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என பல்வேறு சட்டங்க ளைக் கொண்டு வந்தது. எனவே அமித்ஷா காட்டும் பூச்சாண்டி இந்திய வாக்காளர்களிடம் எடுபடாது.

ஆனால் ‘உத்தரவாத’ ஆட்சியின் ‘வளர்ச்சி’  நாயகர் மோடியின் இந்த பத்தாண்டு ஆட்சியில், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமல்ல, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லியிலும் இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத்தள்ளும் ‘காட்டாட்சி’- அதாவது, புல்டோசர் ஆட்சி தானே நடக்கிறது.

ஆனால் ‘உத்தரவாத’ ஆட்சியின் ‘வளர்ச்சி’  நாயகர் மோடியின் இந்த பத்தாண்டு ஆட்சியில், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமல்ல, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லியிலும் இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத்தள்ளும் ‘காட்டாட்சி’- அதாவது, புல்டோசர் ஆட்சி தானே நடக்கிறது.

உ.பி.,யில் துவங்கி ம.பி. வரை விரிவடைந் தது புல்டோசர் ஆட்சி. ஆனால் அந்த புல்டோ சரை வடக்கு தில்லியில் வழிமறித்து நிறுத்தி னார் சிபிஎம் தலைவர் பிருந்தாகாரத். அது இதி காச ராமரின் அஸ்வமேத யாகக் குதிரையை பிடித்துக் கட்டிப் போட்ட லவ, குசர்களின் செயலுக்கு ஒப்பாகும்.

மோடி பெருமையாகக் குறிப்பிடும் இரட்டை என்ஜின் ஆட்சி, புல்டோசர் ஆட்சி, அமித்ஷா வின் பாஷையில் காட்டாட்சி இனியும் இந்தியா வில் தொடராது. நாட்டு மக்களின் விருப்பமும் அதுவே!

;