headlines

img

மாரீச வேடமிடும் மோடி!

மன்னர்களை அவமதிக்கிறார் ராகுல் காந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குறை கூறியிருக்கி றார். மன்னர்கள் மீது மோடிக்கு என்ன திடீர்ப் பாசம்?

குஜராத் மாநில பாஜக எம்.பி., ராஜபுத்திரர் (பெண்)கள் பற்றி அவதூறாகப் பேசியதால் வட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்தனர். அதனால் தனது மூன்றாம் முறை ஆட்சிக் கனவு நிறைவேறாமல் போய் விட்டதே என்கிற ஆத்திரத்திலும் ராஜபுத்திரர்க ளை தாஜா செய்யவுமே மோடி இப்போது மன்னர் களைப் புகழ்ந்திடவும் ராகுலை வசை பாடவும் தொடங்கியிருக்கிறார்.

மன்னர்களை புகழ்வதும் அவர்களது ஜன நாயக விரோத ஆட்சியை ஆதரிப்பதும் ஆர் எஸ்எஸ் பரிவாரத்தின் ரத்தத்தில் ஊறியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அது காஷ்மீர் மன்னர் முதல் திருவாங்கூர் ராஜா வரை ஆதரிப்பதில் வெளிப் பட்டது. பிராமணிய மேலாதிக்க சாதியக் கட்ட மைப்புக் குலையாது; தங்கள் முக்கியத்துவமும் குறையாது என்பதுதான் காரணம்.

இப்போது கூட பிரதமர் மோடி தன்னை ஒரு மன்னராகவே கருதிக் கொண்டுதான், மாநில அர சுகளை இவருக்கு கப்பம் கட்டும் சிற்றரசுகள் போல, அதிலும் எதிர்க்கட்சி ஆட்சிகளை ஆளுநர் கள் மூலம் தொல்லைக்கு உள்ளாக்கிக் கொண்டி ருக்கிறார். ஜனநாயக, அரசமைப்புச் சட்ட நடை முறைகளை மாண்புகளை கொஞ்சமும் மதிக்கா மல் நடந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் ராகுல்காந்தி மோடியை, மன்னர் போல நடந்து கொள்கிறார் என்று கூறுகிறார். அது உண்மை தானே!

ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே சட்டம் என்றெல்லாம் கூறிக் கொண்டு ஒரே தலைவர் என்கிற முறையைக் கொண்டு வரவே துடிக்கிறது. இந்நிலையில் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிற தங்களின் நிகழ்ச்சி நிரலை- எதிர்க்கட்சிகள் மீது சுமத்தி- அதன் பாதுகாவலர் போல வேடம் தரித்திருக்கிறார் மோடி.இடஒதுக்கீடுக்கு எதிராக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள், தற்போது பாது காவலர் வேடம் போடுகிறார்கள். என் உயிரே போனாலும் அரசியல் சட்டத்தை மாற்றவிட மாட்டேன் என்றும் அம்பேத்கர் அளித்த உரிமை களைப் பாதுகாப்பேன் என்றும் கசாப்புக் கடைக் காரர் காருண்யம் பேசுகிறார். 

இந்த தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அவர்கள் கேட்பதே அரசியல் சட்டத்தை மாற்றவும் ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டு வரவுமே. இப்போதே எதேச்சதிகார - பாசிச பாணியிலான ஆட்சியை நடத்துபவர் கையில் மீண்டும் அதிகாரம் கிடைத் தால் நாடு சர்வ நாசத்தையே சந்திக்கும். எனவே இந்த வேடதாரிகளை ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பதே ஜனநாயகத்தை காக்கும் ஒரே வழி!

;