headlines

img

மோடினாமிக்ஸ்...!

‘பாஜகவின் பொருளாதார தொலை நோக்குப் பார்வையில் இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அது மோடினாமிக்ஸ்-இன் வெற்றி’ என ஒன்றிய அரசு பொய் நெல்லைக் குத்தி பொங்கல் வைத்தது அம்பலமாகியிருக்கிறது.

2023 ஆம் நிதியாண்டில் கடந்த 50 ஆண்டுக ளில் இல்லாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  குடும்பங்களில் நிதி சேமிப்பு  5.3 சத விகிதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதே போல் குடும்பங்களின் கடனும்  எப்போதும் இல்லாத அளவில்  54 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.  ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி யடைந்து வரும் போது, சேமிப்பு குறைந்து கடன் எப்படி அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்து 2012 முதல் 2022 ஆம் ஆண்டுவரை குடும்பங்களின் நிதி சேமிப்பு விகிதம் 7 முதல் 8 சதவிகிதமாக இருந்தது. 2023ஆம் நிதியாண்டில் மட்டும்  எப்படி திடீரென குறையும்?.  ஆனால்  இதற்கு முட்டுக்கொடுத்த நிதியமைச்சகம் மக்கள் நிதியாகச் சேமிக்காமல் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்திருக்கின் றனர் என வியாக்கியானம் செய்தது.

நிதியமைச்சகத்தின் இந்த கட்டுக்கதை யையே  உண்மை என்று எடுத்துக் கொண்டால் கூட, 2023- 2024  ஆம் ஆண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி  7.6 சதவிகிதமாக இருந்த போது, தனிநபரின் சராசரி நுகர்வு விகிதம் எப்படி 3 சதவிகிதமாகக் குறைந்தது? 2023- 24 மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 8.4 சதவிகிதம் என்றால், தனிநபர் சராசரி நுகர்வு வளர்ச்சி குறைந்தது 7.4 சதவிகிதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் எப்படி 3 சதவிகிதமாகக் குறைந்தது?

உண்மையான  மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் என்பது, தனிநபர் சராசரி நுகர்வு விகி தத்திற்கு மிகவும் நெருக்கமான நிலையிலேயே இருக்கும்.  இரண்டிற்குமான இடைவெளி  0.5 சதவிகிதம் முதல் 1 சதவிகிதம் வரை இருக்க லாம். சற்று கூடலாம் அல்லது குறையலாம். ஆனால்  ஜிடிபியை விட தனிநபர் சராசரி நுகர்வு எப்படி 4 சதவிகிதத்துக்கு மேல் குறை யும்?. இதற்குக் காரணம்  மோடினாமிக்ஸ் - இல் பொய்களால் வளர்ச்சிப் புள்ளிவிவரங்களை கட்டமைக்கும் போது நேர்ந்த கோளாறே ஆகும்.  

இந்தியா ஒட்டுமொத்த அளவில் ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கலாம். ஆனால் தனிநபர் பொருளா தார அடிப்படையில்  140-ஆவது இடத்தில்  இருப்பதை மறந்துவிடக்கூடாது. மோடினா மிக்ஸ் என்பது காவி சார்பு கார்ப்பரேட் கூட்டாளி களின்  கொள்ளைக்கான  சூத்திரமே தவிர, இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சூத்திரமல்ல.

 

;