india

img

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் திறமையான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லிங்க்ட்இன் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
லிங்க்ட்இன் வெளியிட்டுள்ள திறமை நுண்ணறிவு ஆய்வு அறிக்கையின் தரவுகளின்படி, வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து, திறமையான இளைஞர்கள் கேரளத்துக்கு திரும்புவது கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆய்வின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 9,800 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேரளா திரும்பியுள்ளனர், இது ஒட்டுமொத்தமாக, வெளிநாடுகளிலிருந்து வேலையை விட்டுவிட்டு திரும்பியவர்களில் மிகப்பெரிய எண்ணிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்து கேரள திரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது
கேரளம் திரும்பும் இளைஞர்கள், முதன்மையாக ஐடி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் கல்வி ஆகியவற்றில் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள், அதே நேரத்தில் பலர் தொழில்களைத் தொடங்கவும் சொந்த ஊர் திரும்புகார்கள்.
மேலும், லிங்க்ட்இன் தரவின்படி, கேரளத்தில் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 172% அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்களின் பங்கு மற்றும் ஏற்கனவே அங்குள்ள 37%-க்கும் மேலான பெண் பணியாளர்களின் பங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.