சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இவர் நிர்வாக இயக்குநராக 3 ஆண்டுகளுக்குப் பதவி வகிக்க உள்ளார். ஏற்கனவே, கடந்த 1996-1997 ஆம் ஆண்டில், அவர் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து மத்திய வங்கிக்கு பிரதிநிதியாக இருந்துள்ளார். கடன் சந்தையை மேம்படுத்துதல், வங்கித் துறையை சீர்திருத்துதல், ஓய்வூதிய நிதிகளைப் புதுப்பித்தல் மற்றும் அந்நியச் செலாவணி சந்தையை உருவாக்குதல் குறித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
கடந்த 2016 முதல் 2018 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் 24ஆவது ஆளுநராக உர்ஜித் படேல் பதவி வகித்தார்; மத்திய வங்கியின் சுயாட்சி மற்றும் உபரி இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக உர்ஜித் படேல், பதவிக்காலத்தை முடிவதற்கு முன்பே 2018 டிசம்பர் 10 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.