india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கர்நாடகாவில் 5 மாதங்களுக்குப் பிறகு பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவது, அம்மாநில மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மழை தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் என பெங்க ளூரு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கி றார்கள்.

கர்நாடகத்தின் ஹாசன் தொகுதி எம்பியும் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மகன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ் மற்றும் கைது நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவதூறுகள் வரும் என அஞ்சியே, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் மிசா பாரதி விமர்சித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே போலி சிவசேனாவை நடத்துகிறார் என்றும், உண்மையான கட்சி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் உள்ளது என்றும் வரம்பு மீறிய அடுத்தகட்ட பொய்யை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவிழ்த்துவிட்டள்ளார்.

மக்களவை தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான வாதங்களை உச்சநீதி மன்றம் பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

இடஒதுக்கீடு பற்றி அடிக்கடி தவறான கருத்துக்களை கூறி வரும் பிரதமர் மோடிக்கு, நாட்டில் இடஒதுக்கீடு மீதான 50 சதவீத வரம்பை நீக்குவீர்களா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் ஜனதா தளம் (எஸ்) மூத்த தலை வரும், முன்னாள் அமைச்சரும், பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுதில்லி
மோடி அரசுக்கு
தெரியாமல் ரூ.5 லட்சம் கோடி போதைப்பொருள் காணாமல் போனதா?

கடந்த 2018 முதல் 2020 வரை பறிமுதல் செய்யப்பட்ட 70,772.48 கிலோ ஹெராயின் (ரூ.5 லட்சம் கோடி மதிப்புடையது) போதைப் பொருட்கள் காணாமல் போனது. இது தொடர்பாக மோடி அரசிடம் பல்வேறு புகார் அளித்த நிலையில், இதுவரை சாதா ரண விசாரணை கூட நடத்தப்படவில்லை. 

இந்நிலையில், பறிமுதல் செய்யப் பட்ட போதைப்பொருள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பத்திரி கையாளர் பி.ஆர்.அரவிந்தாக்ஷன் என்ப வர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்த நிலை யில், இந்த விவகாரம் தொடர்பாக மிக  விரைவில் பதிலளிக்க மோடி அரசுக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணி யம் பிரசாத் உத்தரவிட்டார். ஆனால் மோடி அரசு இதுவரை பதிலளிக்காமல் அமைதியாகவே உள்ளது. மோடி அரசுக்கு தெரியாமல் இவ்வளவு பிரம் மாண்ட மதிப்பிலான போதைப் பொருட்கள் காணாமல் போக வாய்ப் பில்லை? ஒன்றிய பாஜக அரசும் அமைதி யாக இருப்பதால் வேறு ஏதோ சந்தே கம் இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களுடன் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பெங்களூரு 
பாஜகவின் பிரச்சாரச் 
செய்தியை ஒளிபரப்ப மறுக்கும் கன்னட சேனல்கள்

பாஜக கூட்டணி கட்சியான மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிரத மருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன் முறை விவகாரம் இந்தியாவில் மட்டு மின்றி சர்வதேச அளவில் பேசும் பொரு ளாக மாறியுள்ளது. தற்போது ஐரோப்பா  நாடான ஜெர்மனியில் பதுங்கி உள்ள  பிரஜ்வலை கைது செய்ய கர்நாடக சிஐடி தீவிரமாக இறங்கியுள்ளது. இந் நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு கன்னட சேனல்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் பிரச்சார செய்திகளை ஒளிபரப்புவதை தவிர்த்து வருகின்றன. 

சில நாட்கள் முன்பாக பிரதமர் மோடி கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த பொழு தும், அவர் வழக்கமாக வருகை தரும்போ தெல்லாம் காலை முதல் இரவு வரை மோடி பயணம் மற்றும் பிரச்சாரத்தை மட்டுமே காட்டும் கன்னட செய்தி டிவி சேனல்கள், தற்போது பாஜகவை பற்றிய செய்திகளையே புறக்கணித்து வருவ தாக “ஒன்இந்தியா கன்னடா” இணைய தள ஆசிரியர் ரவீந்திரா ஆதாரத்துடன் தகவல் தெரிவித்துள்ளார்.

;