india

img

மோடியை கைவிடும் ‘கோடி மீடியா’

புதுதில்லி, மே 9- மக்களவைத் தேர்தலில் பாஜக, பின்னடைவை சந்திக்கும் என்ற அச்சம், நரேந்திர மோடியை ஆழமாக ஆதரித்து வரும் ‘கோடி (கோயபல்ஸ்+மோடி) மீடியா’க்களிட மும் பரவி வருகிறது. முதலாவது மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து முற்றிலும் சங்பரிவார் சேனலாக மாறி யது சுபாஷ் சந்திராவின் ஜீ நியூஸ். தற்போது அதன் அணுகுமுறையில் பெரும்மாற்றம் ஏற்பட்டுள் ளது. ஆசிரியர்குழு மற்றும் நிர்வாகமட்டத்தில் பெரிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்துப் பகுதிகளிலும் சரியான செய்திகள் வழங்கப்படுவதை உறுதி செய்வேன் என்று சுபாஷ் சந்திரா அண்மையில் கூறினார். உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தில் சமூக ஊட கங்கள் மூலம்  அளித்த செய்தியில் இதை அவர் கூறி யிருந்தார். அதற்கு முன், ‘ராவணனை வீழ்த்தியது தலைக் கனம்’ என்று சமூக வலைதளங்களில் எழுதினார். சமீபத்தில், சுபாஷ் சந்திரா, மோடி அரசாங்கத்து டன் ஜீ நியூஸை இணைக்கும் பாலமாக அறியப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி அபய் ஓஜா மற்றும் பாஜக தொடர்புகளை வெளிப்படுத்திய ஆலோசனை ஆசிரியர் பிரதீப் பண்டாரி ஆகியோரை நீக்கினார்.

மற்றொரு பாஜக சார்பு பத்திரிகையாளர் தீபக் சௌரஸ்யா மார்ச் மாதமே சேனலை விட்டு வெளியேறி னார். ஜூன் ஒன்றாம் தேதி இறுதிச் சுற்று வாக்குப் பதிவுக்குப் பிறகு வெளியேறும் கருத்துக்கணிப்பை வழங்க சேனலின் முக்கிய செய்தி தொகுப்பாளராக இருந்த பண்டாரி நியமிக்கப்பட்டார்.

மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தேர்தல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை அந்த சேனல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுபாஷ் சந்திரா 1992 இல் இந்தியாவின் இரண்டாவது தனியார் தொலைக்காட்சி சேனலாக ஜீ டிவியைத் தொடங்கினார். 2016இல் அரியானாவில் இருந்து பாஜக ஆதரவுடன் மாநிங்களவைக்கு வந்தார். 2022இல் ராஜஸ்தானில் இருந்து பாஜக ஆதரவுடன் மாநிலங்களவைக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்

;