india

img

மோடி மீது கடும் நடவடிக்கை வேண்டும்

தோல்வி பயத்தில் உள்ள  பாஜக மதம் சார்ந்த  வெறுப்புப் பேச்சுக் களை தொடர்ந்து பேசி வரும் நிலை யில், ஞாயிறன்று ராஜஸ்தான் மாநி லம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, “அதிக குழந்தை பெற்றுக்  கொள்பவர்கள் ; ஊடுருவல்காரர் கள்” என முஸ்லிம்களை இழிவு படுத்தி வெறுப்பைக் கக்கினார். 

“மோடியின் இந்த கருத்தால் இந்திய நாட்டின் பிரதமர் பதவி  மீதான மரியாதையே போய்விட்  டது” என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் உட்பட நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன. மேலும் திங்களன்று மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் மூல மும், காங்கிரஸ் கட்சி நேரடியாக வும் இந்திய தேர்தல் ஆணையத்தி டம் புகார் அளித்த நிலையில், இந்த  புகாரின் நடவடிக்கை குறித்து தேர்  தல் ஆணையம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. 

இந்நிலையில், செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்  பில் அரசியல் தலைமைக்குழு உறுப்  பினர் பிருந்தா காரத் தில்லி மந்  திர்மார்க் காவல்நிலையத்தில், “பிர தமர் மோடியின் வெறுப்புப் பேச்சு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் மனுவில், “21.04.2024 அன்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். அவர் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இந்  திய முஸ்லிம்களை ஊடுருவல்  காரர்களாகவும், கொள்ளையடிப்ப வர்களாக கூறியுள்ளார். இந்துக்க ளுக்கும் குறிப்பாக இந்துப் பெண்  களுக்கும் அச்சுறுத்தலாக முஸ்லிம்  மக்கள் இருப்பதாக சித்தரிப்பது வகுப்புவாதத்தின் உச்சம் ஆகும்.  இந்த வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்தி வாக்குகளைக் கோரு வது முற்றிலும் சட்டவிரோதமா னது. மேலும் தேசத்தின் வளங்க ளில் முஸ்லிம்களுக்கே முதல்  உரிமை உண்டு என்று முன்னாள் பிர தமர் மன்மோகன் சிங் கூறியதாக வும் ஆதரமற்ற பொய்களை கூறி யுள்ளார். இத்தகைய வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி  மீது ஐபிசி பிரிவுகள் 153 ஏ, 153 பி,  298, 504, 505 இன் கீழ் குற்றவழக்கு  பதிவு செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்று கூறப்பட்டுள் ளது.

20,000 புகார்கள்; திணறும் தேர்தல் ஆணையம்
வெறுப்புப் பேச்சு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல்  ஆணையத்தில் ஆயிரக்கணக்கில் புகார்கள் குவிந்துள் ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த  24 மணிநேரத்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் புகார் மனு சென்றுள்  ளது. ஒவ்வொரு மணிநேரமும் அளவுக்கு அதிகமான புகார் வரு வதால் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பான புகார்களை  ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மீண்டும்  வெறுப்புப் பேச்சு
ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மாதோபூ ரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, “இந்துக்களின் சொத்துகளை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுக்கும் என உண்மையைத்தான் பேசி னேன். உண்மையைச் சென்ன தால் கட்சிகள் அச்சம் அடைந்துள்  ளனர். காங்கிரஸை அம்பலப் படுத்திவிட்டதால் என்னை அவ மதிக்கிறார்கள். தைரியம் இருந்  தால் உண்மையை ஒப்புக்கொள் ளுங்கள். உங்களிடம் உங்களின் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறதா? இல்லையா? என்  பதை காங்கிரஸ் கட்சி எக்ஸ் ரே  செய்து சோதனை செய்யும். நீங்கள் வீட்டில் சிறிய டப்பாவில்  பணம் போட்டு வைத்திருந்தாலோ அல்லது உங்கள் குழந்தை களுக்கு சொத்து ஏதேனும் சேர்த்து வைத்திருந்தாலோ உங்களின் தேவைக்கு அதிகமாக சேமித்து  வைத்திருக்கும் பணத்தை காங்கி ரஸ் அரசு எடுத்துக்கொள்ளும், பிறருக்கு கொடுத்தும் விடும்” என  மீண்டும் சர்ச்சைக்குரிய வகை யில் பேசியுள்ளார்.

;