india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பஞ்சாபில் விவசாயிகள் 6ஆவது நாளாக நடத்தி  வரும் ரயில் மறியல் போராட்டம் காரணமாக, ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 20 லட்சத்து  12 ஆயிரம் ரூபாயை பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் திரும்ப வழங்கி உள்ளது.

மக்களவை தேர்தல் நேரத்தில் ஒன்றிய பாது காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்களன்று லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப்பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்  களை சந்தித்து பேசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 5 லட்  சம் வேலை வாய்ப்புகளை ஆப்பிள் நிறுவனம்  உருவாக்கும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூரை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 8 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 24 அன்று மீண்டும் வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை அருகே வாகன  நிறுத்துமிடம் அமைத்தால் வனவிலங்கு களுக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில மருத்துவம் பற்றி பதஞ்சலி நிறு வனத்தின் விளம்பர சர்ச்சை வழக்கு செவ் வாயன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பொது மன்னிப்புக் கோரியுள்ளார் போலிச் சாமியாரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான பாபா ராம்தேவ்.

குடும்ப மருத்துவரின் ஆலோசனையை பெற  அனுமதி கோரி கெஜ்ரிவால் தரப்பில் தில்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்ற திகார் சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

“நீர்ப்பாசன திட்டத்திற்காக ரூ.50 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.9 கோடிக்கு விற்றது ஏன்?” என ராஜஸ்தான் பாஜக முதல்வர் பஜன்லால் சர்மாவிடம் விவசாய துறை அமைச்சர் கிரோதிலால் மீனா கேள்வி எழுப்பியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் உரி மையை பாதிக்கும் என அமெரிக்க நாடாளு மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்த தற்கான காரணங்களை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

“முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், பல குழந்தைகளை கொண்ட வர்கள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த  2002 முதல் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு களை பரப்பி வாக்குகளைப் பெறுவது மட்டுமே மோடி யின் உத்தரவாதமாக உள்ளது. மோடியின் ஆட்சி யில் நாட்டின் செல்வம் யாவும், அவரது பணக்கார  நண்பர்களுக்கு செல்கிறது. 1% இந்தியர்கள் தான்  நாட்டின் செல்வத்தில் 40% வைத்துள்ளனர் என்பதை பாஜக நினைவில் வைக்க வேண்டும்” என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி விமர் சித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத்தின் மகன் பிரவீன் நிஷாத் சந்த்  கபீர் நகர் மக்களவை தொகுதியில் போட்டியிடு கிறார். தனது மகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக சஞ்சய் நிஷாத், கபீர் நகருக்கு சென்ற நிலையில், “இங்கு ஏன் வாக்கு கேட்க வரு கிறீர்கள்?” என அப்பகுதியை சேர்ந்த சிலர் கேள்வி  எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் கட்சியின் தேர்தல் பாடலில் இருந்து ‘இந்து’, ‘ஜெய் பவானி’ வார்த்தைகளை நீக்க  முடியாது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப்பி உள்ளார்.

ஹைதராபாத்
மசூதியை நோக்கி
அம்புவிடும் சைகை சர்ச்சை
ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மீது வழக்கு

17 மக்களவைத் தொகுதிகள் உள்ள  தெலுங்கானாவில் மே மாதம் 13  அன்று ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் பரதநாட்டிய  கலைஞரான மாதவி லதா பாஜக சார்பில்  களமிறங்கியுள்ளார். இவர் கடந்த ஏப் ரல் 17 அன்று ராமநவமி நிகழ்ச்சியில் முஸ்  லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும்  ஹைதராபாத்தின் மத்தியப் பகுதியில் மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவு வதுபோல் சைகை காட்டியது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர் பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பாஜக வேட்பாளர்  மாதவி லதாவுக்கு நாடு முழுவதும் கண்ட னங்கள் குவிந்தன.

இந்நிலையில், மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் சைகை  காட்டியது தொடர்பாக ஹைதராபாத் தைச் சேர்ந்த ஷேக் இம்ரான் காவல் நிலை யத்தில் புகார் அளித்ததன் பேரில் மாதவி  லதா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்  பிரிவு 295 - ஏ இன் கீழ் வழக்குப்பதிவு  செய்தனர். மேலும் ஷேக் இம்ரான், மாதவி  லதா மீது தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது.

புதுதில்லி
விவசாயிகளை கொன்ற ஆஷிஷ் மிஸ்ரா பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது விதிமீறல்
உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

கடந்த 2021இல் மோடி அரசின்  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவ சாயிகள் போராட்டம் நடத்தினர். 2021 அக்டோபர் 3 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரியில் நடைபெற்ற போராட்ட பேரணியை ஒடுக்கும் நோக்  கத்தில், விவசாய பேரணி கூட்டத்திற்குள்  அதிவேகமாக காரை புகுத்தி விவசாயி கள், பத்திரிகையாளர் 5 பேரை கொன் றார், ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா. இது தொடர்பான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா  உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்ட நிலை யில், கடந்த ஆண்டு ஆஷிஷ் மிஸ்ரா நிபந்  தனையுடன் இடைக்கால ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், நிபந்தனை ஜாமீன் பெற்றுக்கொண்டு அரசியல் நிகழ்வு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் ஆஷிஷ் மிஸ்ரா பங்கேற்ப தாக லக்கிம்பூர் சம்பவத்தில் உயிரிழந்த  விவசாயிகள் குடும்பத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திங்களன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், பி.எஸ்.நரசிம்மா  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலை யில், விவசாயிகள் தரப்பில் மூத்த வழக்க றிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.விசா ரணை வாதத்தின் பொழுது பிரசாந்த் பூஷன்,”லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் இடைக்கால ஜாமீன்  பெற்றுள்ள ஆஷிஷ் மிஸ்ரா நிபந்தனை களை மீறி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள் கிறார்” என குற்றம் சாட்டினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,”ஜாமீன் விதிகளை மீறி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தவறானதாகும். இதற்கு மேல் ஆஷிஷ் மிஸ்ரா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் ஜாமீன் நிபந்தனைகளை மீறுவதாக அமையும்” என எச்சரிக்கை விடுத்தனர்.

;