states

img

‘ஜீரோ கேரண்டி’ ஆன கறுப்புப்பண ஒழிப்பு

பணமோசடிக்கு வழி வகுக்கும் வகையில் தேர்தல் பத்திரம் அமல்படுத் தப்பட்ட தாகவும், இது மிகப்பெரிய அரசியல் ஊழல் என்றும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். கறுப்புப் பணத்தை மீட்பதற்கான நரேந்திர மோடியின் அறிவிப்பு ‘ஜீரோ கேரண்டி’ ஆகிவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் பத்திரம் வழங்கும் ஏகபோக நிறுவனங்களை அடையாளப்படுத்தும். வழங்காதவர்களை அமலாக்கத்துறையும் சிபிஐயும் வேட்டையாடும் எனவும் அவர் கூறினார்.

திருவனந்தபுரத்தில் எல்.டி.எப் வேட்பாளர் பன்னியன் ரவீந்திரனின் தேர்தல் பேரணியை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மேலும் பேசியதாவது:

சிபிஎம் மட்டுமே தொடக்கத்தில் இருந்தே தேர்தல் பத்திரத்தை எதிர்த்தது. பாஜகவுக்கு எதிராக சித்தாந்தப் போராட்டத்தை நடத்தும் வலிமை இடதுசாரிகளுக்கு உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை அழிப்பதே பாஜக  மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது அரசமைப்பு சாசனத்திற்கு அச்சுறுத்த லாகும். இந்தியா இந்துத்துவா மற்றும் பாசிச நாடாக மாறாமல் இருக்க நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

;