states

மாணவர்கள் மீதான தாக்குதல்: அமெரிக்காவை விமர்சித்த ஈரான்

டெஹ்ரான்,ஏப்.29- பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்க பல்கலைக்கழ கங்களில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கலைப்ப தற்காக அமெரிக்க காவல்துறை மாணவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவி வருகிறது. இந்த அடக்குமுறையை   ஈரான் அரசு கடுமையாக விமர்சித்துள்ளது.    அமெரிக்க அரசு  அதன் மனித உரிமை  கடமைகளை புறக்கணித் துள்ளது   என ஈரான்  வெளியுறவுத் துறை அமைச்சக  செய்தித் தொ டர்பாளர் நாசர் கனானி தெரிவித்துள்ளார். மேலும் கல்வி வளாகங்க ளிலும் மாணவர்கள் மீதான வன்முறையையும் நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.  நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போ ராட்டம் துவங்கி நாடுமுழுவதும் பரவியுள்ளது. இந்த போராட்டத்தை கழிப்பதற்காக கடந்த வார இறுதி வரை  சுமார் 275 மாணவர்களை அடக்கு முறை மூலம் அமெரிக்க அரசு   கைது செய்துள்ளது.

;