states

தேர்தல் பிரச்சாரத்தில் ஊனமுற்றோரை இழிவுபடுத்தலாமா?

சில அரசியல் கட்சித் தலைவர்கள், தங்களுக்கு எவ்விதத் தண்டனையும் கிடைக்காது என்ற மனோபாவத்துடன் சிலருக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதும், அப்பட்டமாகப் பொய் சொல்வதும், அவதூறுகளை அள்ளி வீசுவதும் அதிகரித்திருக்கிறது. இவை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் நடத்தை விதி மற்றும் நாட்டின் கிரிமினல் சட்டங்களுக்கு எதிரானவைகளாகும். மார்ச் 29 அன்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் பி.சி.ஜோஷி,  மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலையைக் குறிப்பிடுகையில் ஊன்றுகோலுடன் நடப்பவர்களைக் கேலி செய்திருக்கிறார். இதற்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் புகார் செய்தோம். அதன்மீது அது நடவடிக்கை எடுத்தால்தான், அது கூறியுள்ள கட்டளைகள் நம்பகத்தன்மையைப் பெற்றிடும். இல்லையேல், இத்தகைய கட்டளைகளும் குப்பைத்தொட்டியில் வீசப்படும் தாள்கள் போன்று தோல்வியைத் தழுவிடும். தனது கட்டளையை அமல்படுத்த வேண்டும் இதேபோன்றே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தன்னை எதிர்ப்பவரின் மன நிலை நன்றாக இல்லை என்று பேசியிருக்கிறார். மேலும் அவர், ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய நடத்தையில் ஒரு சைக்கோ என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். சந்திரபாபு நாயுடுவும், ஜெகன் மோகன் ரெட்டியும் ஒருவர்க்கெதிராக மற்றவர் அவதூறுச் சேற்றை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து இருவரையும் கண்டித்திருக்கிறது.   எனினும் தேர்தல் ஆணையம், ஊனமுற்றோர் சம்பந்தமாக அது 2023 டிசம்பர் 20 அன்று  அளித்துள்ள கட்டளையை அமல்படுத்திடத் தவறிவிட்டது. இதேபோன்று ஷில்லாங் டைம்ஸ் இதழில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அதில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர், கிரிடன்பெர்த் மராக்  என்பவர், தன்னுடைய பிரச்சாரத்தின்போது ஊனமுற்ற ஒருவரை அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார். எனவே, தங்களுடைய வழிகாட்டுதல்களின்கீழ் உள்ள நான்காவது பிரச்சனைக்குத் தங்கள் கவனத்தை ஈர்க்கிறோம். அதில் கூறப்பட்டிருப்பதாவது: (i) அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் தாங்கள் பேசும்போதும், எழுதும்போதும்  ஊனமுற்றோர் குறித்தும் ஊனம் குறித்தும் தவறான மற்றும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. (ii) அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் தாங்கள் பேசும்போதும், எழுதும்போதும் மனித இயலாமையின் பின்னணியில் ஊனத்தையோ அல்லது ஊனமுற்றவர்களையோ பயன்படுத்தக்கூடாது. (iii) அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் ஊனம் மற்றும் ஊனமுற்றோர் தொடர்பாக அவர்களை இழிவுபடுத்தக்கூடிய வாசகங்களைக் கூறுவதைத் தவிர்த்திட வேண்டும். இவ்விரு புகார்கள் மீதும் தேர்தல் ஆணையம் முன்மாதிரியான முறையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதேபோன்று சி.பி.ஜோஷிக்கு எதிராக நாங்கள் இதற்குமுன்பு அளித்துள்ள புகார் மீதும் தேர்தல் நடத்தை விதியின் ஷரத்துக்களைப் பயன்படுத்தி  உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு நடவடிக்கை எடுக்காது தவறினால் அது, இதுபோன்ற ஷரத்துக்கள் மற்றும் கட்டளைகள் இருப்பதையே  அர்த்தமற்றதாக்கிடும். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச்செயலாளர் டி.முரளீதரன், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்திலிருந்து

;