states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி ஏற்படும் சூழல் உருவானால், அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன். 

பாஜகவின் மற்றொரு அரசியல் ஆயுதமான தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரப் பாடல்களை தடை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியின்  தேர்தல் பாடலை தேர்தல் ஆணையம் ரத்து செய்வது இதுவே முதல் முறை. ஆனால் பாஜகவின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

ஜம்மு&காஷ்மீரில் “இந்தியா” மிக வலுவாக உள்ளது. கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. ஜம்மு&காஷ்மீரில் உள்ள 5 மக்களவை தொகுதிகளில் வலுவான வெற்றியை “இந்தியா” கூட்டணி பெறும்.

முன்பு ஒரு நாடாக இருந்த இந்தியாவுக்கு மத அடையாளம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இது அரசியலில் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் நடக்கிறது. நாம் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ளோம். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரிவினைப்படுத்தப்படும் பிரச்சாரம் அதிகரித்துள்ளது. இதை பார்க்கவே வேதனையாக உள்ளது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ மனை மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள்  பணியின்போது முழங்கைக்குக் கீழ் அணியக் கூடிய அணிகலன்கள் அணியக் கூடாது. அதே போல் நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர  சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளி லும், அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவைக்குப்  பிந்தைய நோயாளிகளுக்கான தேறுதல் வார்டு களிலும் ஊழியர்கள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதா ரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாநிலங்களை போல நாட்டின் தலை நகர் தில்லியிலும் வெயில் மிரட்டி வரும் நிலையில், ஞாயிறன்று 38.2 செல்ஸியஸ் அளவில்  அங்கு வெயில் கொளுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் பட்டாசு வெடித்தால் கூட சிபிஐ உள்ளிட்ட ஒன்றிய அரசு அமைப்பு கள் விசாரணைக்கு வருகின்றன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 26 அன்று  நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் ஓட்டு போட வந்த இடத்தில் வெயிலுக்கு பலியா னோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் நக்சல்பாரி இயக்கத்தின் தலை வரான குன்னல் கிருஷ்ணன் (85) புற்று நோய் பாதிப்பால் ஞாயிறன்று காலமானார். 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் பேருந்  தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலை யில், படுகாயமடைந்த 20 பேர் சபிபூர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பெய்த பருவமழைக்கு பிறகு கர்நாடக மாநிலம் உடுப்பியில் டெங்கு காய்ச்சல் வேக மாக பரவ வருகிறது. மிககுறுகிய காலத்தில் மாவட்  டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயா ளிகளின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெறு வதற்காக தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பிஎப்ஐக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது என பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சைக் குரிய வகையில் பேசியுள்ளார்.

 

;