சரிவை நோக்கி பிரதமர் மோடி
“இந்தியா டுடே-சி வோட்டர்” கருத்துக் கணிப்பில் தகவல்
புதுதில்லி பிரதமர் மோடியின் செயல் பாடு மற்றும் அவரது தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசாங்கத்தின் செயல் திறன் உள்ளிட்டவை குறித்து “இந்தியா டுடே-சி வோட்டர்” நிறுவனம் இணைந்து 56 மாத இடைவெளியில் கருத்துக் கணிப்பை நடத்தி, அதன் முடிவை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் “இந்தியா டுடே-சி வோட்டர்” நிறுவனம் கருத்துக் கணிப்பை வெளியிட்டன. இந்நிலையில், அடுத்த 6 மாதத் திற்கான கருத்துக் கணிப்பை தற் போது “இந்தியா டுடே-சி வோட் டர்” நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14 ஆம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து மக்கள வை தொகுதிகளிலும் 54 ஆயிரத்து 788 பேரிடம் கருத்துகள் கேட்கப் பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி யின் செயல்பாடு சிறப்பாக இருப்ப தாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள் ளனர். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறி யிருந்தனர். 6 மாதத்தில் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. அதே போல கருத்துக் கணிப் பில் பங்கேற்றவர்களில் 34.2 சத வீதம் பேர் பிரதமர் மோடியின் 3ஆவது பதவி காலத்தில் அவரது செயல் திறன் இதுவரை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். அதே நேரம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக 36.1 சத வீதம் பேர் கூறியிருந்தனர். இது மோடியின் செயல் திறன் சற்று சரிவை காட்டுகிறது. மேலும் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பிரதமர் மோடி யின் செயல் திறன் சராசரி என்று 12.7 சதவீதம் பேரும், மோசம் என்று 12.6 சதவீதம் பேரும், மிகவும் மோசம் என்று 13.8 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர். இது கடந்த கருத்துக்கணிப்புகளை விட மிக அதிகம் ஆகும். இறுதியாக மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அர சின் செயல்பாடு சிறப்பாக இருப்ப தாக கடந்த பிப்ரவரி மாதம் 62.1 சதவீதம் பேர் தெரிவித்து இருந்த னர். ஆனால் தற்போது ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பில் இது 54.2 சதவீதமாக குறைந்துள்ளது. “இந்தியா டுடே-சி வோட்டர்” நிறு வன கருத்துக் கணிப்பு பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.