states

வள்ளலார் சர்வதேச மையத்தை சபையின் மேற்கு பக்க வெளியில் அமைக்கலாம்!

கடலூர், மே 9 - வள்ளலாரின் சத்திய ஞான திருச்சபை  அமைய 105 ஏக்கர் நிலம் கொடுத்த பார்வதி புரம் கிராமமக்களுடன் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். தற்போதுள்ள அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட சபையின்  மேற்கு பக்கத்தில் உள்ள பரந்த வெளியில் சர்வதேச மையத்தை அமைக்க தமிழக அரசு முயற்சிக்கலாம் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட் டக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட லூர் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி சுப்ராயன் தலைமையில் மே 8 அன்று  நடைபெற்றது.  மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர்  கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையைத் திரித்து, அவரை ஒரு சனா தனவாதி என்று மத அடிப்படைவாதிகள் கட்ட மைக்க முயற்சி செய்யும் நேரத்தில் அவரது உண்மையான சமூகப் பார்வையை,  சைவ  சித்தாந்த நெறிகளை, அதன் கொள்கை களை உலகிற்கு அறிவிக்கும் வகையில் அவர் நினைவாக ஒரு சர்வதேச மையத்தை வடலூரில் அமைக்க தமிழக அரசு எடுத்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கடலூர் மாவட்டக்குழு  வரவேற்கிறது.  

பார்வதிபுரம் மக்களுடன் கலந்துரையாடல் நடத்துக!

நாங்கள் விசாரித்த வரை,  இந்த அறிவிப்பின் மீது  இரு வேறு கருத்துக்கள் நிலவும் சூழலே வடலூரில் உள்ளது.  பொதுவாக பெருவெளியை ஆக்கிர மித்து  சர்வதேச மையத்தை அமைக்கக் கூடாது என்னும் கருத்து உள்ளது. இது பற்றிய விளக்கங்களையும், இந்தத் திட்டம் குறித்த முழுமையான புரிதலையும் மக்கள்  மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, சர்வதேச மையம் அமைய உள்ளது பற்றி,  பூசத்தின் போது கொடியேற்றும் உரிமை வள்ளலாரால் வழங்கப்பட்ட  பார்வதிபுரம் மக்களுடன் இதுவரை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்பது பெருங் குறையாகும். உடனடியாக அவர்களுடன் கலந்துரையாட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வள்ளலார் கூற்றை கவனத்தில் கொள்க!

1867 ஆம் ஆண்டு பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த 47 நபர்கள்  105 ஏக்கர் நிலத்தை வள்ளலாருக்கு தானமாக கொடுத்தனர். அங்கு தான் சத்திய ஞான திருச்சபை அமைந்துள்ளது.  தைப்பூச காலங்களில் லட்சக்கணக்கில் கூடும் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதற்காக அந்தப் பெருவெளி யில் எந்த கட்டுமான நிகழ்வும் நடத்தக் கூடாது என்று வள்ளலார் கூறியிருப்பதை கவ னத்தில் கொள்ள வேண்டுமென கருது கிறோம்.   வள்ளலாருக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் கொடுத்த 105 ஏக்கரில் கிட்டத்தட்ட 45 ஏக்கர் இப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த  ஆக்கிரமிப்பை மீட்டு அதனை வள்ளலார் பெயரில்  அறப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கருதுவதில் நியாயம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து எடுக்க வேண்டும். 

நிலம் கொடுத்தவர்களின் பெயர்களை கல்வெட்டில் பொறித்திடுக!

அறநிலையத்துறை சார்பாக வெளி யிடப்பட்ட திருஅருட்பா உரைநடை பகுதி யில் பார்வதிபுரம்  கிராம மக்கள்  தானமாக அளித்த 81 காணி நிலம் மற்றும் அளித்த வர்களின் பெயர்கள், அவர்களது  வகை யறா, நிலத்தின் அளவு, அதன் சர்வே எண் போன்ற வரலாற்றுச் சான்றுகள் பல ஆண்டு களாக இருந்தன. ஆனால் இப்போது நீக்கப் பட்டுள்ளன. இவ்விவரங்களை மீண்டும் உரைநடை பகுதியிலும், அமைய உள்ள சர்வதேச மையத்தின் கல்வெட்டிலும்  தமிழக அரசு வெளியிட வேண்டும். வள்ளலார் வாழ்ந்து வந்த காலம் தொட்டு பார்வதிபுரம் தெற்கு புறத்திலிருந்து சத்திய ஞான சபை, சத்திய தர்மசாலைக்கும் மதியம், இரவு ஜோதி தரிசனம் காண தினம் தோறும் அந்த வழியாக செல்கின்றனர். வள்ளலார் சர்வதேச மையம் அமைந்தால்  அந்த வழியை சுவர் கட்டி அடைக்கும் விதத்தி லும், ஞானசபை வீதி,  அருட்பா தீர்த்த சாலை,  தர்மசாலை வீதி ஆகியவற்றுக்கு குறுக்கே தடுப்பு மதில்  கட்டி அடைப்பதாகவும் திட்டம் உள்ளதாக அறிகிறோம்.  அவ்வழி கள்  திறந்த வெளியாக இருக்கவேண்டும். 

போராடியவர்கள் மீதான  வழக்குகளை திரும்பப்பெறுக!

வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 23, 24 இல் வசிக்கும் சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் மேற்கண்ட இந்த வழிகளை  பயன்படுத்தி வருகின்றனர். மதில் கட்டி அடைத்தால் தினந்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்ப வர்கள், கடைத்தெருவுக்கு செல்பவர்கள் வேறு எந்த வழியாக செல்ல முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று வடலூரில் சர்வதேச மையத்திற்கு துவக்கக்கட்ட பணிகள் நடந்த இடத்தில் அவ்விடத்தில் கட்டிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 150 பொது மக்களை காவல்துறையினர் கைது செய்த னர். அதில் 20 பேர் மீது ஐஞஊ 143, 341,  342, 353, 323 மற்றும் 506(2) பிரிவுகளில் வழக்கு தொடுத்துள்ளதை ஒட்டி அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தங்களின் முன்னோர்கள் கொடுத்த பெரு வெளியில் வள்ளலார் வாக்கின் படி வேறெந்த பணிகளும் செய்யக்கூடாதென போராடி யவர்கள் மீது போட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.   மேலும் கட்டுமானப் பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது அங்கே ஏற்கனவே கட்டடம் இருந்ததற்கான அடை யாளம் தெரிந்தவுடன் தொல்லியல் துறைக்கு ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. அந்த ஆய்வினை முழுமையாக முடித்திட வேண்டும்.  வடலூர் நெய்வேலி சாலையிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளலார் அவர்கள் உருவாக்கிய புராதன சபையை பார்த்துச் செல்லும் மக்கள் அதை மறைக்கும் படியான  எந்தக் கட்டுமானமும்  மேற்கொள்ளப் படக் கூடாது எனக் கருது கின்றனர்.   மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட இப்போது அமைந்துள்ள சபை யின்  மேற்குபக்கத்தில் உள்ள பரந்த வெளி யில் சர்வதேச மையத்தை அமைக்க ஏன் தமிழக அரசு முயற்சி செய்யக்கூடாது?  அவ்வாறு செய்தால் சர்வதேச மை யத்தின் முகப்பு பக்கம் வடலூர் நெய்வேலி சாலையில் துவங்கி ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் இந்த இடங்களைப் பார்த்துவிட்டு பொது மக்கள், அதன் இடது புறம் வந்து வள்ளல் பெருமான் உருவாக்கிய சத்ய ஞான திருசபையையும், அணையா அடுப்பு உள்ள தருமசாலையையும் கண்டு செல்வார்கள்.  மேலும் வள்ளலாரின் புகழ் உலகம் வியக்க அமைக்கப்படும் இந்த சர்வதேச  மையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் போது  மையத்திற்கு ஆதார மான நிலங்களைக் கொடுத்த பார்வதிபுரம் மக்களுக்கு  கட்டுமான பணிகளில் முன்னு ரிமை கொடுப்பது அவசியமாகும். மேலும் விவசாய பணிகள் மேற்கொள்ள களம் அமைத்திட வேண்டும் எனவே இந்த மாற்று ஆலோசனையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

;