states

img

அதிக ஜிஎஸ்டியால் வாகனங்கள் 2 மடங்காக விலை உயர்வு

புனே, மே 4- நரேந்திரமோடி அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் எங்கள் தொழிலே போச்சு. அதீத கட்டுப்பாடுகளால் இருசக்கர வாகனங்களின் விலை இரு மடங்காக உயர் ந்து விட்டது என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் ராஜிவ் பஜாஜ்.  பல்சர் என்எஸ்-400-இசட் வெளியீட்டு விழாவில் செய்தி யாளர்களிடம் பேசும் போது ராஜிவ் பஜாஜ் கூறியதாவது:- பிஎஸ்-6  விதிமுறைகள் சமுதாயத்திற்கு நல்லது என்று தான் நினைத்ததாகக் கூறிய அவர், இரு சக்கர வாகனங்களின் விலை உயர்வுக்கு சந்தையில் உள்ள ‘அதிகப்படியான கட்டுப்பாடுகளும்’ ‘அளவுக்கதிமான ஜிஎஸ்டி-யுமே காரணம். இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், “ஏன் இந்தியாவில், சாமானி யர்களின் வாகனங்களுக்கு, நாம் ஏன் 28 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்?” என்று  கேள்வியெழுப்பிய பஜாஜ், ஜிஎஸ்டி  12 முதல் 18 சதவீதத்திற்குள்  இருக்க வேண்டும். தொடக்க நிலை ஆசியன்நாடுகள், லத்தீன் அமெரிக்கா. பிரேசில் போன்ற நாடுகளில் 8-முதல் 14 சதவீதமே வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.  கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு இருசக்கர வாகனங்களின் விலை அதிகரித்தது. விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்தியாவில் இரு சக்கர வாகனப் பிரிவின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது என்றார். ராஜீவ் பஜாஜ் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பல்சர் என்எஸ்-400-இசட் வாகனத்தின் அறிமுகவிலை ரூ. 1.85 லட்சம் ஆகும்.  இந்த நிலையில், இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.   ஆட்டோமொபைல் டீலர்களின் அமைப்பான (எப்ஏடிஏ) 2023-ஆம் ஆண்டு  சாலை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில் முக்கியமாக “100-125சிசி பிரி வுக்குள் வரும் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது”.  மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகள், அதிக வரிகள் காரணமாக, 2016-ஆம் ஆண்டு ரூ.52,000-ஆக இருந்த ஹோண்டா ஆக்டிவாவின் விலை  2023-ஆம் ஆண்டு ரூ.88,000 ஆக உயர்ந்தது. பஜாஜ் பல்சர் விலை 2016-ஆம் ஆண்டு ரூ,72,000 இருந்தது. இது 2023-ஆம் ஆண்டு கடந்தா ண்டு 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது என ஆட்டோமொபைல் டீலர்களின் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

;