tamilnadu

img

கேரளத்தில் இலங்கை படுகொலை தீவிரவாதிகள்

கொழும்பு, மே 4-இலங்கையில் 250க்கும் அதிகமானோர் உயிரிழப்புக்கு காரணமான தொடர் குண்டு வெடிப்புக்கு பின்னணியாக செயல்பட்டவர்கள் கேரளத்திலும் காஷ்மீரிலும் புகுந்துள்ளதாக இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயகெ பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.குண்டு வெடிப்பில் பங்கேற்றவர்களும் அக்கொடிய நிகழ்வுக்கு பின்னணியில் செயல்பட்டவர்களும் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தனக்கு கிடைத்துள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு இலங்கை தளபதி இந்த தகவலை தெரிவித்துள்ளார். பயிற்சிக்காகவோ, இலங்கைக்கு வெளியே உள்ள அத்தகைய அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவோ அவர்கள் இந்தியா சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஒன்பது தற்கொலை படையினர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்தியா உள்ளிட்டநாடுகளிலிருந்து கிடைத்த ரகசிய தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை ராணுவ தளபதி ஏற்றுக்கொண்டார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரகசிய தகவல்கள் அளித்திருந்த போதிலும் பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு தொடர்பு பரிமாற்றத்தில் நேர்ந்த இடைவெளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  கடந்த பத்து ஆண்டுகளாக சுதந்திரம், சமாதானத்துடன் இலங்கை திகழ்ந்து வந்ததாகவும் ராணுவ தளபதி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

;