tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து தொடரும் போராட்டம்

உதகை,பிப்.28- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நீலகிரியில் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மத்திய அரசு கொண்டு வந்திருக் கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவ தும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தில்லி ஷாஹின்பாக் பகுதியில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்பினர்  கண்மூடித்தனமானத் தாக்குதலை  நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 30க் கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள னர்.  இந்நிலையில், தில்லி ஷாஹின் பாக் பகுதியில் ஆர்எஸ்எஸ் சங்பரி வார் அமைப்புகள் திட்டமிட்டு நடத் திய வன்முறை கலவரத்தை கண்டித் தும், உயிரிழந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க கோரி யும் அனைத்து அரசியல் கட்சியினர் சார்பில் வெள்ளியன்று கூடலூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட முன் னேற்றக் கழகத்தின் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அம்சா, கே.பி.முகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் என்.வாசு, மாவட்டக் குழு உறுப் பினர்கள் லீலா வாசு, தங்கராஜ், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் குணசேக ரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சகாதேவன், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் கட்சியின் கே.பி.முகமது அலி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டு தில்லி படுகொ லையை கண்டித்து கண்டன முழக்கங் களை எழுப்பினர்.

தொடர் தர்ணா

இந்த தாக்குதலை கண்டித்தும், தாக் குதலை நடத்தியவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும் பப்பெற வலியுறுத்தியும் இஸ்லாமிய அமைப்புகள் உதகையில் தொடர் தர்ணா போராட்டத்தை துவங்கி உள்ள னர். இப்போராட்டமானது லோயர் பஜார் அருகில் பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். 

ரயில் மறியல்

தில்லி கலவரத்தில் உயிரிழந்த மக்க ளுக்கு நியாயம் கேட்டும், கலவரத் திற்கு காரணமான மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மனிதநேய மக் கள் கட்சியினர் குன்னூரில் ரயில் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட் டோரை காவல் துறையினர் கைது செய் தனர்.

 

;