tamilnadu

img

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.53%மும், மாணவர்கள் 88.58%மும் தேர்ச்சி.
அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.77% ஆகவும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.90% ஆகவும் உள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாக கணிதம் பாடத்தில் 20,691 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். 
தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், அறிவியலில் 5,104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் 4,428 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் (97.31%) மாவட்டம் முதலிடம், சிவகங்கை மாவட்டம் (97.02%) இரண்டாம் இடத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் (96.36%) மூன்றாம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் (96.24%) நான்காம் இடத்திலும், திருச்சி மாவட்டம் (95.23%) ஐந்தாம் இடத்திலும் உள்ளது. 
மேலும், மற்ற மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம்: விருதுநகர் - 95.14%, ஈரோடு - 95.08%, பெரம்பலூர் - 94.77%, தூத்துக்குடி - 94.39%, விழுப்புரம் - 94.11%, மதுரை - 94.07%, கோவை - 94.01%, கரூர் - 93.59%, நாமக்கல் - 93.51%, தஞ்சாவூர் - 93.40%, திருநெல்வேலி - 93.04%, தென்காசி - 92.69%, தேனி - 92.63%, கடலூர் - 92.63%, திருவாரூர் - 92.49%, திருப்பூர் - 92.38%, திண்டுக்கல் - 92.32%, புதுக்கோட்டை - 91.84%, சேலம் - 91.75%, கிருஷ்ணகிரி - 91.43%, புதுச்சேரி - 91.28%, ஊட்டி - 90.61%, மயிலாடுதுறை - 90.48%, தர்மபுரி - 90.45%, நாகப்பட்டினம் - 89.70%, சென்னை - 88.21%, திருப்பத்தூர் - 88.20%, காஞ்சிபுரம் - 87.55%, செங்கல்பட்டு - 87.38%, கள்ளக்குறிச்சி - 86.38%, திருவள்ளூர் - 86.52%, திருவண்ணாமலை - 86.10%, ராணிப்பேட்டை - 85.48%, வேலூர் - 82.07%, காரைக்கால் - 78.02% ஆக உள்ளது.

;