tamilnadu

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது

சென்னை, மே 6- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6 அன்று தொடங்கியது. ஜூன் 6 ஆம் தேதி வரை  விண்ணப்ப பதிவு செய்யலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி www.tneaonline.org mšyJ www.dte.gov.in என்ற இணைய தளங்கள் வாயிலாக விண்ணப்பங் களை பதிவு செய்யலாம். ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250 பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 12-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜூலை  10 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

;