tamilnadu

img

இந்திய வீரர் குகேஷூக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

‘பிடே’ கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடர் கனடாவின் டொரண்டோ நகரில் நடந்தது. இதில், 9 புள்ளிகளை குவித்த இந்திய வீரர் குகேஷ் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இந்நிலையில், இந்திய வீரர் குகேஷூக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “17 வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாறு படைத்த குகேஷூக்கு வாழ்த்துகள். உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெல்ல வாழ்த்துகள்” என்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், குகேஷூக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

;