tamilnadu

img

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: மாற்று பாலின மாணவி தேர்ச்சி!

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வெழுதிய ஒரே மாற்று பாலினத்தை சேர்ந்த மாணவை தேர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,08,440 பேர் மாணவிகள், 3,52,165 பேர் மாணவர்கள், மாற்று பாலினத்தவர் ஒருவர், 5603 மாற்றுத்திறன் மாணவர்களும், சிறைவாசிகள் 125 பேரும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.  இந்த நிலையில், சென்னை லேடி வில்லிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய மாற்று பாலினத்தை சேர்ந்த மாணவி நிவேதா 283 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளார்.
அதேபோல், மாற்றுத்திறன் மாணவர்கள் 5,161 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிறையில் இருந்து தேர்வெழுதிய 125 பேரில் 115 பேர் (92%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
 

;