tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!
சென்னை, ஏப்.22- விருதுநகர் மக்க ளவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பா ளர் மாணிக்கம் தாகூ ரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை  மீறி, வாக்காளர் களுக்கு டோக்கன் களை வினியோகித்ததாகவும் எனவே, வேட்பாளரான மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுப்ப தற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட வேண்டும் என்றும் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த, தலைமை  நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு “இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அதற்குள் விளம்பர நோக்கு டன் இந்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது” எனக்கூறி மனுவை தள்ளு படி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிமுக அழியக் கூடாது என அண்ணாமலை நினைக்கிறார்!
டிடிவி தினகரன் புல்லரிப்பு

சென்னை, ஏப்.22- அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நியமிக் கப்பட்ட டிடிவி தின கரன், இரட்டை இலைச்  சின்னத்தைப் பெறு வதற்காக லஞ்சம் கொடுத்தார் என்று அவரை திகார் சிறையில் அடைத்தது ஒன்றிய பாஜக அரசு. அதுமட்டுமல்ல, டிடிவி தினகரனுக்கு எதிராக சுமார் 200  இடங்களில் பாஜக அரசு ரெய்டு நடத்தி யது. இதனால், பாஜகவோடு கூட்டணி  சேர்வது தற்கொலை சமம் என்றெல்லாம்  டிடிவி தினகரன் கூறினார். ஆனால், தற்  போது பாஜக கூட்டணியில்சேர்ந்து  தேர்தலிலும் போட்டியிட்டுள்ள டிடிவி  தினகரன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “எம்ஜிஆர் மற்றும் ஜெய லலிதா மீது பாஜக என்ற கட்சிக்கு பெரிய மரியாதையும், அன்பும் உள்ளது.  அவர்கள் ஆரம்பித்த கட்சி அழிந்து விடக்கூடாது, நல்லவர்கள் கையில் வர வேண்டும் என நினைக்கிறார் அண்ணா மலை!” என்று புல்லரித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
சென்னை, ஏப்.22- பணப்பரிவர்த் தனை வழக்கில்  கைது செய்யப்பட் டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,  வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என  புதிய மனு ஒன்றை சென்னை முதன்மை  அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தி ருந்தார்.

வங்கியிலிருந்து நீதிமன்றத்தில் சமர்ப்  பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை வழங்கிய வங்கி  சார்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடு கள் இருப்பதாக கூறியிருந்தார். 

இந்த வழக்கு திங்களன்று விசார ணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்  துறை வழக்கில் அசல் ஆவணங்கள் அனைத்தும் செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு குறித்து ஓரிரு நாளில் வாதங்கள் தொடரும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 25 வரை நீட்டிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது!
பள்ளிக்கல்வி துறை உத்தரவு

சென்னை, ஏப்.22- கோடை விடு முறையில் அரசு மற்  றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்  தக்கூடாது என்று  பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

“முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவில், பள்ளி மாண வர்களுக்கு கோடை விடுமுறை மற்றும்  அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளி களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக வும், இதனால் மாணவர்களுக்கு உள வியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுத்து வதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது. 

இப்புகாரின் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடு முறை மற்றும் அரசு பொது விடுமுறை  நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு களை தவிர்க்குமாறும், மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வர வைப்பதற்கு அழுத்தம் தரக்கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என்று பள்  ளிக்கல்வித்துறை அறிக்கை வெளி யிட்டுள்ளது.

;