tamilnadu

வாக்குப்பதிவு அறிவிப்பு குளறுபடி: சத்யபிரதா சாகு விளக்கம்

சென்னை, ஏப்.22- தமிழ்நாட்டில் நடை பெற்ற வாக்குப்பதிவில் ஏற்  பட்ட குளறுபடிக்கு செயலியே  காரணம் என தலைமைத் தேர்  தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 39 தொகு திகளில் மக்களவை தேர்த லுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 அன்று ஒரே கட்ட மாக நடைபெற்றது. வாக்குப்  பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து முகவர்கள் முன்  னிலையில் மின்னணு வாக்  குப்பதிவு இயந்திரங்க ளுக்கு சீல் வைக்கப்பட்டு ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, தமிழ்நாட் டில் 72.09 விழுக்காடு வாக்கு கள் பதிவானதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தி ருந்தார். ஆனால், 69.46 விழுக்காடு வாக்குகளே பதி வானதாக அதேநாள் நள்ளிர வில் இந்திய தலைமை தேர்  தல் ஆணையம் அறிவித்தது.

தமிழ்நாடு தலைமை தேர்  தல் அதிகாரி அறிவிப்புக் கும், இந்திய தலைமை தேர்  தல் ஆணையம் அறிவிப்புக்  கும் நிறைய வேறுபாடு இருந்  ததால் வாக்கு சதவீதத்தில் குளறுபடியா? என கேள்வி எழுந்தது. பின்னர், இறுதி யாக இரண்டு எண்ணிக் கைக்கும் இடையே 69.72 சத விகிதம் வாக்குகள் பதிவான தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், இந்த குழப்பத்திற்கு என்ன காரணம்? என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு வாக்கு சத விகிதம் குறித்து விளக்கம்  அளிப்பார் என எதிர்பார்க் கப்பட்டது.

இந்நிலையில்தான், திங்  களன்று செய்திக் குறிப்பு  ஒன்று வெளியிடப்பட்டுள் ளது. அதில், “செயலியில்  கிடைத்த தகவல் அடிப்படை யில் வாக்குப்பதிவு சதவிகி தம் கணக்கிட்டதால் சில  குளறுபடிகள் நடைபெற் றது. செயலியில் அனைத்து  வாக்குச்சாவடி அலுவலர் கள் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று  எந்த உத்தரவும் இல்லை எனக் கூறி, ஒரு சிலர் மட்டுமே அப்  டேட் செய்தார்கள். இதன்  காரணமாக வாக்குப்பதிவு சதவிகிதம் குளறுபடி ஏற்பட் டது. தேர்தல் நடத்தும் அதி காரி கையெழுத்து போட்டு  கொடுக்கும் தகவல் கால தாமதமாகும். அதன் காரண மாகவே செயலி மூலம் மீடி யாவுக்கு அப்டேட் செய்தோம்” என்று விளக்கம் அளிக்கப் பட்டு உள்ளது.

12 மாவட்டங்களில் கண்காணிப்பு
“மேலும், திருவள்ளூர்,  வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி,  கோவை, தேனி, கன்னியா குமரி, திருநெல்வேலி, தென்  காசி, திருப்பத்தூர் ஆகிய  12 மாவட்ட எல்லை பகுதி களில் நிலையான கண்கா ணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் கண்காணிப்பு ஈடுபடுவர். தமிழ்நாட்டில், எந்த தொகுதியில் மறு வாக்குப்பதிவு கேட்டு  கோரிக்கை வைக்கப்பட வில்லை” என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

;