tamilnadu

img

மீனவர்கள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ நிகழ்வு!

சென்னை, மே 4- இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில  நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்ச ரிக்கையும் இன்றி பலத்த காற்  றின் விளைவாக கடல் சீற்றம்  ஏற்படும். திருடனைப்போல சற்றும் எதிர்பாராத தரு ணத்தில் இது வரும் என்பதால்  கேரள மக்கள் இதை, ‘கள்ளக்  கடல் நிகழ்வு’ என அழைக்கின்ற னர்.

அந்த வகையில், சனிக் கிழமை அதிகாலை 2.30 மணி  முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாக தேசிய  பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) மற்றும்  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகி யவை எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, கன்னி யாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் 1.5 மீட்டர் அளவிற்கு உயரும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீன வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், படகு களை பாதுகாப்பாக நிறுத்துமாறும் கேட்டுக் கொள்  ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கடற்கரை களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

;