tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டம்: தலைவர்கள் எச்சரிக்கை

சென்னை, மே 13-ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வைகோ(மதிமுக): தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்து விட்டு, லட்சக்கணக்கான மக்களை புலம் பெயரச் செய்வதற்கு மோடி அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி அரசும் சதித் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும்.இரா. முத்தரசன்(சிபிஐ): மக்கள் நலனில் சிறிதும் அக்கறை யில்லாத மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சகத்தின் மூலம் அனுமதி யளித்துள் ளது. எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, இப்பிரச்சனையில் மவுனம் காப்பதன் மூலம் இதனை ஏற்பதற்கு ஒப்புதல் அளிக்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்றவும், வேளாண் மண்டலத்தை பாதுகாக்கவும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும்.திருமாவளவன்(விசிக): தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை ஆரம்பித்து அந்தப் பகுதியையே நாசமாக்கி மக்களின் உயிர்களைக் குடித்து பேரழிவை ஏற்படுத்திய வேதாந்தா நிறுவனம் புதுச் சேரி, விழுப்புரம் பகுதிகளையும் சுடுகாடு ஆக்குவதற்கு மோடி அரசு வழிவகுத்திருப் பதை உடனே ரத்து செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.எம்.எச்.ஜவாஹிருல்லா(மமக): தமிழகத் தில் சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை உருவாக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் உள்ளிட்ட திட்டங் களை செயல்படுத்தக் கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை உடனே திரும்பப் பெறவேண்டும். இதுபோன்ற திட்டங்களை தமிழகத்திலிருந்து விரட்டக் காவிரி பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

;