tamilnadu

img

திரவ நைட்ரஜனை கலந்த உணவை விற்க கூடாது - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

திரவ நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது எனவும், உணவு விடுதிகளில் திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளை விற்க கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவின் தாவணக்கரை பகுதியில் அண்மையில் சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டு வலியில் துடிதுடித்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றப்பட்டார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னையில் திரவ நைட்ரஜன் கலந்த உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது எனவும், உணவு விடுதிகளில் திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளை விற்க கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

;