tamilnadu

சிசிடிவி-க்களை பழுதின்றி இயக்குக!

சென்னை, ஏப். 29 - ‘தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் வாக்குப்பெட்டி வைப்பறைகளில் சிசிடிவி  கேமிராக்கள் எவ்வித பழுதின்றி முழுமை யாக இயக்கப்பட வேண்டும்; அந்த பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்க வேண்டும்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.

சென்னை தலைமைச் செய லகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ திங்கட்கிழமை (ஏப்.29) நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

“நீலகிரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கக் கூடிய ஸ்ட்ராங் ரூமில் இருக்கும் சிசிடிவி கேமிராக்கள் கடந்த ஏப்ரல் 27 அன்று 20 நிமிடங்களுக்கு இயங்கவில்லை. தொடர்ச்சியாக அந்த சிசிடிவி கேமிராக்கள் இயங்கி வந்ததால், மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு சிசிடிவி கேமிராக்கள் இயங்கவில்லை என்று நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ஓர் அறிக்கை கொடுத்திருந்தார்.

எனவே, இதுபோன்ற நிலை தமிழ்நாட்டில் உள்ள மற்ற எந்த தொகுதிகளிலும் ஏற்படக் கூடாது என்பதை வலியுறுத்தி திமுக சார்பில் கோரிக்கை மனு ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறோம். 

குறிப்பாக, வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதின்றி முழுமை யாக இயங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று இந்த பாது காப்பு அறைகள் திறக்கப்படும் வரை சிசி டிவி கேமிராக்கள் செயல்பட வேண்டும்.

ஸ்ட்ராங் ரூம் தொடர்பான காட்சிப் பதிவுகளை, வேட்பாளர்களின் முகவர்கள் கேட்கும்போது வழங்க வேண்டும். மேலும், ஸ்ட்ராங் ரூம் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து குறைந்தது 500 மீட்டர் தொலைவுக்கு டிரோன் போன்ற கருவிகள் பறப்பதற்கு தடை விதிக்க வேண்டும். 

அந்தப் பகுதிகளை ‘டிரோன்கள் பறக்கும் பகுதியல்ல’ என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.  இந்த இரண்டு கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக, தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். 

இவ்வாறு என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.

 

;