tamilnadu

img

5, 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு பிற்போக்குத்தனமானது

சென்னை
தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளான செவ்வாயன்று (செப்.17) பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் ஆகியோர் மலர்வளை யம் வைத்து மரியாதை செலுத்தினர்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “மத்திய பாஜக அரசு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பெயரில் இந்தியையும், இந்துத்துவாவைவும் திணிப்பதற்கு  எடுக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடுவதற்கு சபதமேற்போம்” என்றார்.செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ராம கிருஷ்ணன், “உலகிலேயே சிறந்த கல்வி முறை இருக்கக் கூடிய பின்லாந்து நாட்டிற்கு சென்று பள்ளிக் கல்வி அமைச்சர் ஆய்வு செய்துவிட்டு வந்துள்ளார். அந்நாட்டிற்கு சென்று வந்த பிறகும், 5 மற்றும் 8ஆம்வகுப்பிற்கு பொதுத்தேர்வுஎன்று அறிவித்திருப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது. கிரேடு முறை கொண்டுவந்துள்ள சூழலில், மதிப்பெண்களை போட்டு மாணவர்களை புறந்தள்ளக்கூடாது. பொதுத் தேர்வு முறையால் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியாதசூழல் உருவாகும். எனவே, பொதுத்தேர்வை ஒரு போதும் ஏற்க முடியாது” என்றார்.

;